பிறந்தநாள் கொண்டாடிய பாடசாலை மாணவருக்கு நேர்ந்த சோகம்!
மகனின் பிறந்தநாளுக்காக வீரகணேஷின் பெற்றோர் 4 ஆயிரம் ரூபாய் அளித்துள்ளனர்
கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய வீரகணேஷ் மறுநாள் தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
தமிழக மாவட்டம் திருச்சியில் பிறந்தநாள் கொண்டாடிய 11ஆம் வகுப்பு மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
திருச்சி லால்குடியை அடுத்த திருமண மேடு புதுத் தெருவைச் சேர்ந்த பாடசாலை மாணவர் வீரகணேஷ்(17). 11ஆம் வகுப்பு படித்து வந்த இவர் நேற்று முன் தினம் தனது பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடியுள்ளார்.
பெற்றோர் அளித்த பணத்தில் புத்தாடை வாங்கி மகிழ்ச்சியாக இருந்த வீரகணேஷ், மறுநாள் தனது அறையை விட்டு வெளியே வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, தூக்கில் தொங்கியபடி வீரகணேஷ் பிணமாக இருந்துள்ளார்.
மகனின் இந்த நிலையைப் பார்த்து பெற்றோர் கதறி அழுதுள்ளார். அதனைத் தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், வீரகணேஷின் உடலைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிறந்தநாளை மகிழ்ச்சியாக கொண்டாடிய மாணவர் மறுநாள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.