மாதவிடாயை காரணம் காட்டி மாணவியை வாசலில் தேர்வு எழுத வைத்த பள்ளி நிர்வாகம்- வெளியான வீடியோ
தனியார் பள்ளியில் மாதவிடாயை காரணம் காட்டி சிறுமியை வகுப்பறைக்குள் அனுமதிக்காமல், வாசலில் தேர்வு எழுத வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெளியான வீடியோ
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே செங்குட்டை பாளையத்தில் சுவாமி சிப்பவானந்தா மெட்ரிகுலேஷன் பள்ளி இயங்கி வருகிறது.
இங்கு எட்டாம் வகுப்பு படிக்கும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் கடந்த 5ஆம் திகதி பூப்பெய்தி உள்ளார்.
எனினும் தற்போது முழு ஆண்டு தேர்வுகள் நடைபெறுவதால் தேர்வு எழுதுவதற்காக வகுப்பறைக்கு வந்துள்ளார்.
மாதவிலக்கு: வகுப்பறை வாசலில் தேர்வு எழுதிய மாணவி; பள்ளி நிர்வாகம் மீது பெற்றோர் புகார் pic.twitter.com/mojlJjLeCm
— Indian Express Tamil (@IeTamil) April 10, 2025
ஆனால் சிறுமியை வகுப்பறைக்குள் அனுமதிக்காத பள்ளி நிர்வாகம் சிறுமியை வகுப்பறை வாசலில் அமர வைத்து தேர்வு எழுத வைத்துள்ளனர்.
சிறுமியின் தாய் தனது செல்போனில் பதிவு செய்த இந்த வீடியோ காட்சிகள் வைரலாகி வருகின்றன.
மாதவிடாயை காரணம் காட்டி மாணவியை வாசலில் அமர வைத்து தேர்வு எழுத வைத்த தனியார் பள்ளி நிர்வாகத்தின் நடவடிக்கை சர்ச்சைக்கு உள்ளாகி உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |