மன்னர் சார்லஸ் மீது முட்டை வீசிய மாணவனுக்கு சிறைத்தண்டனை
மன்னர் மூன்றாம் சார்லஸ் மீது முட்டைகளை வீசிய இங்கிலாந்து மாணவர் 6 மாத சிறைவாசத்தை எதிர்கொள்ளவுள்ளார்.
மன்னர் சார்லஸ் மற்றும் கமிலாவின் திசையில் முட்டைகளை வீசிய பின்னர் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 23 வயது மாணவர், பொது ஒழுங்கை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
முட்டை வீச்சு
மன்னரும் ராணியும் நவம்பர் மாதம் வடக்கு இங்கிலாந்திற்கு பொதுமக்களை நேரில் சந்தித்தபோது அந்த மாணவரால் முட்டை வீச்சு தாக்குதலை எதிர்கொண்டனர்.
AP
சம்பவத்தின்போது, நான்கு முட்டைகள் மன்னர் சார்லஸ் மற்றும் ராணி காமிலாவைக் கடந்து பறந்து வந்து தரையில் விழுந்து நொறுங்கும் வீடியோ இணையத்தில் வெளியாயின. இருப்பினும், இருவரும் தொடர்ந்து பொதுமக்களை பார்வையிட்டனர்.
கோஷம் எழுப்பி தாக்குதல் நடத்திய அந்த இளைஞரை பொலிஸார் லூடன் டவுன் ஹாலுக்கு வெளியே கூட்டத்திலிருந்து தற்காலிகமாக அழைத்துச் சென்றனர். பின்னர் அவர் வேறு பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டார்.
பின்னர் சில கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்ட அந்த இளைஞர் மீது காவல்துறை இப்போது வழக்குப்பதிவு செய்துள்ளது.
Getty Images
பொது ஒழுங்குச் சட்டம் 1986-ன் பிரிவு 4-ன் கீழ் முரணான வகையில் பேட்ரிக் தெல்வெல் மீது குற்றம் சாட்டபட்டுள்ளது.
இந்நிலையில், தாக்குதல் நடத்திய யோர்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 23 வயது மாணவரான பேட்ரிக் தெல்வெல் (Patrick Thelwell) ஜனவரி 20- ஆம் திகதி யோர்க் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜராவார்.
இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், பேட்ரிக் தெல்வெலுக்கு குறைந்தது 6 மாத சிறைத்தண்டனை வழங்கப்படும் என கூறப்படுகிறது.
AP