12 ஆம் வகுப்பில் முதலிடம் பெற்று நீட் தேர்வில் 720க்கு 700 மதிப்பெண்கள் எடுத்த மாணவி
மாணவி ஒருவர் 10 ஆம் வகுப்பில் 97.6% மதிப்பெண்களும், 12 ஆம் வகுப்பில் முதலிடமும் பெற்று, நீட் தேர்வில் 720க்கு 700 மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றுள்ளார்.
யார் அவர்?
ஜம்முவைச் சேர்ந்த மாணவியான ஜஹ்னவி பனோத்ரா, தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET UG) 2022 இல் அகில இந்திய அளவில் 51வது இடத்தைப் பிடித்து தனது குடும்பத்தினருக்கும் நகரத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
சந்திரஹாஸ் பனோத்ரா மற்றும் அம்பிகா பனோத்ரா ஆகியோருக்குப் பிறந்த ஜஹ்னவியின் தாத்தா பி.கே. சர்மா ஓய்வு பெற்ற ஐ.எஃப்.எஸ் அதிகாரி. அவரது மற்றொரு தாத்தா எஸ்.கே. ரெய்னா மூத்த வழக்கறிஞர் ஆவார்.
ஆறாம் வகுப்பு படிக்கும்போதே மருத்துவராக வேண்டும் என்ற கனவு ஜாஹ்னவிக்கு ஏற்பட்டதால் 11 ஆம் வகுப்பில் நீட் தேர்வுக்குத் தயாராகத் தொடங்கினார். பின்னர் தனது கடின உழைப்பால் 720க்கு 700 மதிப்பெண்கள் பெற்று நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றார்.
10 ஆம் வகுப்பில், அவர் 500க்கு 488 மதிப்பெண்களும், 12 ஆம் வகுப்பில், 500க்கு 490 மதிப்பெண்களும் பெற்றார். இதையடுத்து நீட் தேர்வில் சிறந்து விளங்கி டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (எய்ம்ஸ்) இடம் பெற்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |