ஆசிரியர்களுக்கு லஞ்சம் கொடுத்த மாணவர்கள்... வைரலாகும் புகைப்படம்
இந்தியாவில் பரீட்சையில் கூடிய மதிப்பெண்களை பெறவேண்டும் என்ற நோக்கில் மதிப்பீட்டாளர்களுக்கு லஞ்சம் கொடுக்க மாணவர்கள் முயற்சித்துள்ளனர். இது தொடர்பான ஒரு பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
லஞ்சம் கொடுத்த மாணவர்கள்
இந்தியாவின் காவல்துறை அதிகாரியான அருண் போத்ரா தனது டுவிட்டர் பக்கத்தில் பணத்தின் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
இந்த பணமானது ஒரு ஆசிரியர் அனுப்பிய படம். மாணவர்களின் பரீட்சை தாள்களுக்குள் இந்த பணம் இருந்ததாகவும், அவர்கள் சித்தி பெறுவதற்கான மதிப்பெண்களை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையிலும் பணத்தாள்கள் வைக்கப்பட்டுள்ளது.
Pic sent by a teacher. These notes were kept inside answer sheets of a board exam by students with request to give them passing marks.
— Arun Bothra ?? (@arunbothra) August 21, 2023
Tells a lot about our students, teachers and the entire educational system. pic.twitter.com/eV76KMAI4a
அதாவது பரீட்சை தாள்களை திருத்தும் பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கு லஞ்சம் கொடுக்க முயற்சித்துள்ளனர்.
இதை தவறான விடயம் என்று உணர்த்துவதற்காகவே இந்த பதிவை காவல்துறை அதிகாரியான அருண் போத்ரா ட்வீட் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |