மாணவர்கள் கிட்ட ரவுடிங்க கலாட்டா பண்ணாங்க - ஆய்வுக்கு வந்த முதல்வர் விஜய்யிடம் புகார்
சமூகநீதி விடுதியில் ஆய்வு மேற்கொண்ட முதல்வர் விஜய்யிடம் மாணவர்கள் ஏராளமான புகார்களை தெரிவித்துள்ளனர்.
சமூகநீதி விடுதியில் முதல்வர் விஜய் ஆய்வு
தமிழக முதல்வர் விஜய், இன்று சென்னை சைதாப்பேட்டையில் உள்ள எம்.சி.ராஜா சமூகநல விடுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அங்குள்ள வசதிகளை பார்வையிட்ட அவர், மாணவர்களிடம குறைகள் மற்றும் தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.

முதல்வர் விஜய்யிடம், அங்குள்ள மாணவர்கள் ஏராளமான புகார்களை தெரிவித்தனர்.
மாணவர்கள் புகார்
விடுதியில் பேசிய மாணவர், முன்னதாக புழு, பூச்சி உள்ள உணவே வழங்கப்பட்டு வந்தது. அதன் பின்னர் ஒப்பந்ததாரர் மாற்றப்பட்ட பின்னர் 5 நாட்களுக்கு நல்ல உணவு கிடைத்தது. மீண்டும் தரமற்ற உணவு வழங்கப்படுகிறது.
பல மாணவர்கள் இங்கு தங்கி, TNPSC மற்றும் UPSCக்கு படிகின்றனர். அவர்கள் இன்ஸ்ட்டியூட் முடித்து வர இரவு நேரமாகி விடுவதால், விடுதி கதவை மூடி விடுகின்றனர்.
பல மாணவர்கள் இரவு கொசுக்கடியில் பார்க்கில் தூங்க வேண்டிய நிலை உள்ளது. ஒருமுறை மாணவர்கள் கிட்ட ரவுடிங்க வந்து கலாட்டா பண்ணாங்க.
வார்டன் மற்றும் கண்காணிப்பாளர்கள் மாணவர்களை இழிவாக பேசுகின்றனர். கழிவறை உடைந்து சுத்தமில்லாத நிலையில் உள்ளது. போதிய கண்காணிப்பு கேமராக்கள் இல்லை" என கூறினார்.
மாணவர் கூறிய புகார்களை கேட்டுக்கொண்ட முதல்வர் விஜய், அங்குள்ள சமையல் தயாரிப்பு கூடம், கழிவறை, மாணவர்களின் அறை ஆகியவற்றில் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
இதன் பின்னர் இந்த ஆய்வு குறித்து பேசிய சமூகநீதித்துறை அமைச்சர் வன்னியரசு, முதல்வர் ஆய்வுக்கு செல்வது எங்களுக்கே 10 நிமிடம் முன்னதான் தெரியும். ஒரு முதலமைச்சரே பசங்க கிட்ட நேரடியா குறைகளை கேக்குறதை இப்போதான் பாக்குறேன்.
மாணவர்களின் குறைகள் மற்றும் தேவைகள் அனைத்தும் சரி செய்யப்பட வேண்டும் என முதல்வர் எங்களுக்கு உத்தரவிட்டுள்ளார்" என பேசினார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |