சுவிட்சர்லாந்தில் சான்றிதழ் காரணமாக படிப்பை பாதியில் கைவிடும் மாணவர்கள்
சுவிட்சர்லாந்தில் லூசர்ன் பல்கலைக்கழகங்கள் கட்டாயம் மாணவர்கள் தடுப்பூசி சான்றிதழ் சமர்ப்பிக்க கோரியிருந்த நிலையில் பலர் படிப்பை பாதியில் கைவிடுவதாக தெரிய வந்துள்ளது.
மாணவர்களிடம் தடுப்பூசி சான்றிதழ் கட்டாயப்படுத்துவது உண்மையில் கண்டிக்கத்தக்கது என்ற எதிர்ப்பு குரலும் எழுந்துள்ளது. தற்போது இந்த விவகாரத்தில் முழு அறிக்கை ஒன்றை கோரியுள்ளது லூசர்ன் மாநில நிர்வாகம்.
8000 மாணவர்கள் பயிலும் Lucerne University of Applied Sciences and Arts-ல் சான்றிதழ் காரணமாக 20 மாணவர்கள் படிப்பை பாதியில் கைவிட்டதாக தெரிய வந்துள்ளது.
இதேப்போன்று, PH Luzern-ல் 2,300 மாணவர்களில் 10 பேர்கள் ஓராண்டுக்கு பின்னர் படிப்பை தொடர இருப்பதாக கூறி, பாதியில் கைவிட்டு சென்றுள்ளனர்.
இந்த நிலையில், கொரோனா தடுப்பூசி சான்றிதழ் காரணமாக அல்லாமல், படிப்பை பாதியில் கைவிட்டவர்கள் எண்ணிக்கையை பல்கலைக்கழகங்கள் சேகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, தொடர்புடைய மூன்று லூசர்ன் பல்கலைக்கழகங்களும், நன்மைகள் மற்றும் தீமைகளைக் கவனமாகப் பரிசீலித்த பிறகு, கட்டாயச் சான்றிதழிற்கு ஆதரவாக முடிவு செய்ய வேண்டும் என பெடரல் அரசாங்கம் கூறியுள்ளது.
சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டதன் நோக்கமே, மாணவர்கள் அனைவரும் மீண்டும் வகுப்பறைகளுக்கு திரும்ப வேண்டும் என்பதே எனவும் பெடரல் நிர்வாகம் சுட்டிக்காட்டியுள்ளது.