கனடாவுக்கு பல்லாயிரம் ரூபாய் கோடி வருவாயை உருவாக்கும் சர்வதேச மாணவர்கள்... கனடா எடுக்க இருக்கும் நடவடிக்கைகள்
ஆண்டுக்கு 22 பில்லியன் டொலர்கள் வருவாயை உண்டாக்கும் சர்வதேச மாணவர்கள் மோசடிகளால் பாதிக்கப்படுவதைத் தடுப்பதற்காக, பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க உள்ளது கனடா அரசு.
மோசடியில் சிக்கிய மாணவர்கள்
இந்தியாவின் ஜலந்தரில் அமைந்துள்ள, Brijesh Mishra என்பவர் நடத்தும் Education Migration Services என்ற அமைப்பில், ஆளுக்கு 16 இலட்ச ரூபாய்க்கும் அதிகமான தொகையை செலுத்தி கனடாவில் கல்வி கற்பதற்காக, கல்வி விசாவுக்கு விண்ணப்பித்தார்கள் 700 மாணவர்கள்.
அவர்கள் படிப்பை முடித்து நிரந்தரக் குடியிருப்பு அனுமதி கோரி விண்ணப்பிக்கும்போது அவர்களுடைய அனுமதி ஆஃபர் கடிதங்கள் (admission offer letters) போலியானவை என தெரியவந்ததையடுத்து, அவர்கள் நாடுகடத்தப்படும் நிலை உருவாயிற்று.
பல்லாயிரம் கோடி வருவாயை உருவாக்கும் சர்வதேச மாணவர்கள்
கனடாவுக்கு ஆண்டொன்றிற்கு சர்வதேச மாணவர்களால் 22 பில்லியன் டொலர்கள் வருவாய் கிடைக்கிறது. இது, கனடாவின் ஏற்றுமதி வருவாயை விட அதிகமாகும்.
2020ஆம் ஆண்டில், சர்வதேச மாணவர்கள் எண்ணிக்கை தற்காலிகமாக குறைந்ததாலேயே கனடாவுக்கு 7 பில்லியன் டொலர்களுக்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
மோசடிகளைத் தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள்
இப்படி கனடாவுக்கு மிகப்பெரிய வருவாயை உருவாக்கும் சர்வதேச மாணவர்கள் மோசடிகளில் சிக்குவதைத் தவிர்ப்பதற்காக கனடா புதிய விதிகள் சிலவற்றை அறிவித்துள்ளது.
அதன்படி, 2023 டிசம்பர் 1ஆம் திகதி முதல், முதுகலைக் கல்வி கற்பிக்கும் அனைத்து கல்வி நிறுவனங்களும், ஒவ்வொரு மாணவரின் letter of acceptance என்னும் அங்கீகாரக் கடிதமும் உண்மையானதுதானா என புலம்பெயர்தல் துறையின் சரிபார்க்கும் முறையின் மூலம் உறுதி செய்த பின்னரே, அவருக்கு கல்வி அனுமதி வழங்கப்படும் என கனேடிய புலம்பெயர்தல் துறை அமைச்சரான Marc Miller தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |