500 ரூபாய் நோட்டுகளை வீசி நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம்
நீட் தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி ரூ.500 நோட்டுகளை வீசி மாணவர்கள் போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாணவர்கள் போராட்டம்
இந்தியா முழுவதும் கடந்த மாதம் நீட் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் முறைகேடுகள் நடந்திருப்பதாக கூறி மறுதேர்வை நடத்தக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், வரும் 21 -ம் திகதி நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக இந்திய தேசிய காங்கிரசின் மாணவர் பிரிவான இந்திய தேசிய மாணவர் சங்கம், டெல்லியில் உள்ள இந்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இல்லம் முன்பாக நீட் தேர்வை ரத்து செய்ய கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தின் தேசிய காங்கிரசின் மாணவர்கள் 500 ரூபாய் நோட்டுகளை வீசி எறிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
அதோடு, நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று முழக்கமிட்டவர்களை பொலிஸார் கைது செய்தனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |