தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் இனி கடைசி பெஞ்ச் கிடையாது- வெளியான அறிவிப்பு
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் இனி கடைசி பெஞ்ச் கிடையாது என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இனி கடைசி பெஞ்ச் கிடையாது
பொதுவாக, படிப்பில் சிறப்பாக இருக்கும் மாணவர்கள் முன்வரிசையிலும், படிப்பில் பின்தங்கிய மாணவர்கள் கடைசி வரிசையிலும் அமரவைப்பது வழக்கம்.
இந்நிலையில், கேரளத்தில் சமீபத்தில் வெளியான 'ஸ்தானார்த்தி ஸ்ரீகுட்டன்' என்ற திரைப்படம் கடைசி இருக்கையில் அமர்வதால் கிராமப்புற மாணவர்களின் நலன் பாதிக்கப்படுவதாக கூறியுள்ளனர்.
இதனையடுத்து கேரளத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்களின் இருக்கைகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.
மாணவர்கள் வரிசையாக அமர்வதற்கு பதிலாக அரைவட்ட வடிவில் அல்லது ப வடிவில் அமர வைக்கும் நடைமுறையை கொண்டு வந்துள்ளனர்.
வெளியான அறிவிப்பு
இதனைதொடர்ந்து தமிழகத்திலும் தற்போது மாணவர்களை அரைவட்ட வடிவில் அல்லது ப வடிவில் அமரவைக்க பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக அனைத்துப் பள்ளிகளுக்கும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
பள்ளிகளில் இனி கடைசி பெஞ்ச் என்பது கிடையாது என்றும் மாணவர்களை ப வடிவில் அமர வைப்பதன் மூலமாக அனைவருக்கும் முன்னுரிமை அளிக்கும் வகையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாணவர்கள் ஒருவரையொருவர் பார்க்க, ஆசிரியரைக் கவனிக்க வசதியாக இருக்கும் எனவும் விளக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |