சத்து மாத்திரை என தூக்க மாத்திரையை சாப்பிட்ட பள்ளி மாணவர்கள்: மருத்துவமனையில் சிகிச்சை
தமிழக மாவட்டம், கடலூரில் சத்து மாத்திரை என தூக்க மாத்திரையை மாணவர்கள் சாப்பிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தூக்க மாத்திரை சாப்பிட்ட மாணவர்கள்
கடலுார் மாவட்டம், சிதம்பரம் அடுத்துள்ள அக்கரை ஜெயங்கொண்டபட்டினத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது. அங்கு, ஆசிரியராக பணியாற்றி வருபவர் லதா.
இவர், கனிஷ்கா என்ற மாணவிக்காக கால்சியம் மாத்திரை வாங்கி வந்து, ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு வைத்துள்ளார்.
இந்நிலையில், நேற்று மாலை கனிஷ்காவை கால்சியம் மாத்திரையை எடுத்து சாப்பிடுமாறு கூறியுள்ளார். அப்போது, மாணவி கனிஷ்கா கால்சியம் மாத்திரை இருக்கும் டப்பாவை எடுக்காமல் தூக்க மாத்திரை டப்பாவை திறந்து, அந்த மாத்திரையை எடுத்து சாப்பிட்டுள்ளார்.
அதை போல், நான்காம் வகுப்பு படிக்கும் ஹரிதர்ஷன், ஹரிணி, ரக்ஷ்யா ஆகிய மாணவர்களும், ஐந்தாம் வகுப்பு படிக்கும் ஹரிஷ் , ஆதவன், ராதாகிருஷ்ணன் ஆகிய மாணவர்களும் தூக்க மாத்திரையை சாப்பிட்டுள்ளனர்.
மாணவர்கள் மயக்கம்
இதனால், சிறிது நேரத்தில் அவர்களுக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையறிந்த ஆசிரியை ஆம்புலன்ஸ் மூலம் அவர்களை சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தார்.
அங்கு, மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில், மாணவர்கள் தூக்க மாத்திரை சாப்பிட்ட விவகாரம் தொடர்பாக அண்ணாமலை நகர் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |