விசா காலாவதியானால் வெளிநாட்டு மாணவர்கள் வெளியேறவேண்டும்: கனேடிய மாகாணம் திட்டவட்டம்
வெளிநாட்டு மாணவர்கள் கனடாவுக்கு படிக்கவந்தால், படித்துவிட்டு நாட்டைவிட்டு வெளியேறுங்கள் என்று கூறியுள்ளார் ஆல்பர்ட்டா பிரீமியர்.
கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில், இந்திய மாணவர்கள் உட்பட சர்வதேச மாணவர்கள் பட்டம் பெற்றபின் பணி உரிமம் பெறுவது தொடர்பில் பிரச்சினை ஏற்பட்டதால் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுவருகிறார்கள்.
வெளிநாட்டு மாணவர்கள் வெளியேறவேண்டும்
இந்நிலையில், சர்வதேச மாணவர்களின் ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில் கருத்து தெரிவித்த ஆல்பர்ட்டா மாகாண பிரீமியரான டேனியல் ஸ்மித், வெளிநாட்டு மாணவர்கள் கனடாவுக்கு படிக்கவந்தால், படித்துவிட்டு நாட்டைவிட்டு வெளியேறுங்கள் என்று கூறியுள்ளார்.
எங்கள் பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும், ஆல்பர்ட்டா மாகாண மக்களின் வரிப்பணத்தால் கட்டப்பட்டவை. அவை ஆல்பர்ட்டா மாகாண மாணவர்களுக்காக கட்டப்பட்டவை.
அங்கு சர்வதேச மாணவர்களுக்கு இடம் இருக்குமானால், விடயம் எளிமையானது, கல்வி கற்றுக்கொள்ளுங்கள், உங்கள் சொந்த நாட்டுக்குத் திரும்பிச் சென்று உங்கள் கல்வியின் அடிப்படையில் உங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளுங்கள், அவ்வளவுதான், என்கிறார் ஸ்மித்!
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |