கனடாவில் சர்வதேச மாணவர்களுக்கான வேலை நேர வரம்பு நீக்கம்! வெளியான முக்கிய தகவல்
சர்வதேச மாணவர்களுக்கான 20 மணி நேர வேலை வரம்பை கனடா திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.
கனேடிய அரசாங்கத்தின் புதிய கொள்கை முழுநேர படிப்புகளை தொடரும் மாணவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.
கனேடிய அரசாங்கம் இப்போது தொழிலாளர் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் நிலையில், ஆயிரக்கணக்கான சர்வதேச மாணவர்களுக்கு ஒரு பெரிய நிவாரணமாக, சர்வதேச மாணவர்கள் வளாகத்திற்கு வெளியே எத்தனை மணிநேரம் வேலை செய்யலாம் என்ற வாரத்திற்கு 20 மணிநேர வரம்பை திரும்பப் பெற்றுள்ளது.
கனடாவில் வேலை தேடுபவர்கள் ஜூலை மாதத்தில் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் வேலைகளைத் தேடிக்கொண்டிருந்தனர், அப்போது கனடாவின் வேலை வாய்ப்பு விகிதம் 5.4 சதவீதமாகக் குறைந்துள்ளது. அதுவே, ஏப்ரல் மாதத்தில் வேலை வாய்ப்பு விகிதம் 6 சதவீதமாக உச்சத்தில் இருந்தததாக கூறப்படுகிறது.
இந்த வார தொடக்கத்தில் கனடாவின் குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை அமைச்சர் சீன் ஃப்ரேசர் (Sean Fraser) விவரங்களை அளித்து, கனடாவில் உள்ள ஒவ்வொரு சமூகத்திலும் உள்ள தொழிலாளர்களை விட அதிக வேலை வாய்ப்புகள் உள்ளன என்று கூறினார்.
சில சர்வதேச மாணவர்கள் சேவை வேலைகளில் பணிபுரியும் அதே வேளையில், சிலருக்கு அவர்களின் படிப்புத் துறையில் வேலை கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.
கனடா தற்காலிகமாக கட்டுப்பாடுகளை நீக்கியுள்ளது!
தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிக்க கனடா 15 நவம்பர் 2022 முதல் 31 டிசம்பர் 2023 வரை தடையை தற்காலிகமாக நீக்கியுள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
கனேடிய அரசாங்கத்தின் புதிய கொள்கை முழுநேர படிப்புகளை தொடரும் மாணவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
கனடாவில் வாழ்க்கைச் செலவு அதிகமாக இருப்பதால், இந்த வேலை நேர வரம்பை நீக்குவதன்மூலம், இந்திய மாணவர்களும் மற்ற சர்வதேச மாணவர்களும் இப்போது நிதி ரீதியாக தங்களைச் சிறப்பாக ஆதரிக்க முடியும் என்று கூறப்படுகிறது.
கனேடிய அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையானது பல வெளிநாட்டு மாணவர்களுக்கு கனடாவில் தேவையான வேலை அனுபவத்தைப் பெறுவதற்கான வாய்ப்பை விரிவுபடுத்தும்.