அமெரிக்காவில் கல்வி... தந்தையின் ரூ.26,500 கோடி நிறுவனத்தை நிர்வகிக்க பறந்து வந்த தமிழர்
இந்தியாவின் 100 பெரும் கோடீஸ்வரர்கள் பட்டியலில் சமீபத்தில் இணைந்த KP Ramasamy என்ற கோவை தமிழரின் நிறுவனத்தை தற்போது அவரது மகன் நிர்வகித்து வருகிறார்.
தங்கள் குடும்பத் தொழிலை
வெளிநாட்டில் படித்துவிட்டு இந்தியாவுக்குத் திரும்பிய பல தொழிலதிபர்கள் தங்கள் குடும்பத் தொழிலை வளர்ப்பதற்கு உதவியதாக ஏராளமான சம்பவங்கள் நடந்துள்ளன. அந்த வகையில் ஒருவர் தான் CR Anandakrishnan.
ஜவுளி மற்றும் சர்க்கரை உற்பத்தியாளர் கேபிஆர் மில் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக தற்போது செயல்பட்டு வருகிறார் சிஆர் ஆனந்தகிருஷ்ணன். கேபிஆர் மில் நிறுவனமானது 1984ல் கேபி ராமசாமி என்பவரால் நிறுவப்பட்டது.
2023ல் இந்தியாவின் 100 பெரும் கோடீஸ்வரர்கள் பட்டியலில் கேபி ராமசாமி இணைந்துள்ளார். அவரது மொத்த சொத்துமதிப்பு என்பது ரூ.9,143 கோடி என்றே கூறப்படுகிறது. ஃபோர்ப்ஸ் இந்தியா கோடீஸ்வரர்கள் பட்டியலில் கே.பி.ராமசாமி 100வது இடத்தில் உள்ளார்.
நவம்பர் 8ம் திகதி நிலவரப்படி இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.26,473 கோடியாக உள்ளது. மேலும் இன்றைய நிலவரப்படி கேபிஆர் மில் நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை ரூ.775 என்றே கூறப்படுகிறது.
நிர்வாகக் குழுவில் இணைந்து
கேபிஆர் மில் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரான ஆனந்தகிருஷ்ணன் கோவை ஜிஆர்டி கல்லூரியில் வணிக மேலாண்மையில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். அத்துடன், அமெரிக்காவின் பிலடெல்பியா பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார்.
2002ல் இருந்தே கேபிஆர் குழுமத்தின் நிர்வாகக் குழுவில் இணைந்து பணியாற்றி வருகிறார் ஆனந்தகிருஷ்ணன். 2011ல் கேபிஆர் மில் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டார்.
மேலும், கோயம்புத்தூரில் AUDI மற்றும் Harley Davidson ஆகியவற்றின் அங்கீகரிக்கப்பட்ட டீலர்ஷிப்களையும் ஆனந்தகிருஷ்ணன் நிர்வகிக்கிறார். கேபிஆர் மில் நிறுவனமானது ஆண்டுதோறும் 128 மில்லியன் ஆடைகளை உற்பத்தி செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |