பணியாளர் பற்றாக்குறையை தீர்க்க AI உதவாது: சுவிஸ் ஆய்வு முடிவுகள்
study finds ai wont solve skills shortage in switzerland: நல்ல விடயங்களுக்காக உருவாக்கப்படும் சில கண்டுபிடிப்புகள், காலப்போக்கில் சில விடயங்களில் தொல்லையாக மாறிவிடுகின்றன.
இன்று, போர்களில் கொத்துக் கொத்தாக மனிதர்களைக் கொல்லப் பயன்படுத்தப்படும் ட்ரோன்களை அதற்கு உதாரணமாகக் கூறலாம்.
அதேபோல, AI என்னும் விடயமும், தொழில்நுட்பத்தில் முன்னேற்றங்களைக் கொண்டுவரும் நோக்கில் அறிமுகம் செய்யப்பட்டாலும், இன்று அது மனிதர்களின் வேலையைப் பறித்துவிடுமோ என்னும் அச்சத்தை உருவாக்கியுள்ளதை மறுப்பதற்கில்லை.
சுவிஸ் ஆய்வு முடிவுகள்
இந்நிலையில், Deloitte Switzerland என்னும் ஆய்வமைப்பு மேற்கொண்ட ஆய்வுகளின் முடிவுகள், ஆறுதலளிக்கும் செய்தி ஒன்றைக் கூறுகின்றன.

ஆம், என்னதான் தொழில்நுட்பத்தில் AI சாதித்தாலும், சில வேலைகளைச் செய்ய மனிதர்களால்தான் முடியும்.
உதாரணமாக, முதியவர்களை கவனித்துக்கொள்ளுதல், சிறார்களுக்கு கல்வி கற்றுக்கொடுத்தல் மற்றும் உடல் உழைப்பு வேலைகள் சிலவற்றை AIயால் செய்யமுடியாது.
ஆக, பணியாளர் பற்றாக்குறையைத் தீர்க்க AIயால் முடியாது!
சொல்லப்போனால், மனிதர்கள் மட்டுமே செய்யமுடியும் பணிகளில் பணியாளர் தட்டுப்பாடு நீடிக்கத்தான் செய்யும், நிலைமை மோசமாகவும் வாய்ப்புள்ளது என்கின்றன ஆய்வு முடிவுகள்.
ஆக, சுவிட்சர்லாந்தைப் பொருத்தவரை, AIயால் செய்ய முடியாத பணிகளைக் கொண்ட துறைகளில் பணியிடங்கள் காலியாகத்தான் இருக்கப்போகின்றன.
ஆகவே, முதியோரை கவனித்துக்கொள்ளுதல், விருந்தோம்பல் துறை போன்ற துறைகளில் பணியாளர்களுக்கு வேலைக்கான பயிற்சி அளிப்பதை சுவிஸ் தொழில்துறையினர், கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆட்சியாளர்கள் வலுப்படுத்தவேண்டும் என பரிந்துரைக்கின்றன ஆய்வு முடிவுகள்.