லண்டனில் படிக்க விரும்பும் வெளிநாட்டு மாணவர்களுக்கு பிரித்தானியாவின் வருத்தமளிக்கும் செய்தி
லண்டனில் படிக்க விரும்புகிறீர்களா? மாணவர்களின் பராமரிப்பு நிதி வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் (UK) சர்வதேச மாணவராக படிப்பதற்கு திட்டமிட்டிருந்தால், உங்கள் படிப்பு முடியும் வரை ஒவ்வொரு மாதத்திற்கும் உங்கள் வாழ்க்கைச் செலவுகளை பூர்த்தி செய்யும் அளவுக்கு போதுமான நிதி ஆதாரத்தை பிரித்தானிய உள்துறை அலுவலகம் (Home Office) முன் நிரூபிக்க வேண்டும்.
2020-ஆம் ஆண்டிலிருந்து திருத்தப்படாத இந்நிதி வரப்பு, 2025 ஜனவரி 2 முதல் புதிய விதிமுறைகளுடன் நடைமுறைக்கு வரவுள்ளது என உள்துறை அறிவித்துள்ளது.
லண்டனில் படிக்கச் செல்லும் மாணவர்கள், ஒவ்வொரு மாதத்திற்கும் £1,483 நிதி இருப்பை நிரூபிக்க வேண்டும்.
அதே சமயத்தில் லண்டன் வெளியே உள்ள மாணவர்கள் £1,136 நிதி இருப்பை நிரூபிக்க வேண்டும்.
முன்னதாக இந்த நிதி அளவு லண்டனில் £1,334 மற்றும் லண்டனுக்கு வெளியே £1,023-ஆக இருந்தது.
நாடு முழுவதும் வாழும் செலவுகள் உயரும் நிலையில், இந்த நிதி வரம்புகள் பீரியடிக்கல் முறையில் திருத்தப்படும் என அரசு தெரிவித்துள்ளது.
இதன் அடிப்படையில், லண்டனில் 9 மாதங்களுக்குப் பராமரிப்பு நிதியாக £13,348 இருக்கும் பணத்தை மாணவர்கள் தங்கள் வீசா விண்ணப்பத்தின் போது நிரூபிக்க வேண்டும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |