பிரித்தானிய பல்கலையில் கல்வி கற்றுக்கொண்டிருந்த வெளிநாட்டு மாணவர்: திடீரென நாடுகடத்தப்படும் நிலை
பிரித்தானியப் பல்கலையில் பயின்றுகொண்டிருந்த மாணவர் ஒருவர், அவர் மீது எந்த தவறும் இல்லாத நிலையிலும் நாடுகடத்தப்படும் சூழலுக்கு ஆளாகியுள்ளார்.
திடீரென நாடுகடத்தப்படும் நிலை
பாகிஸ்தான் நாட்டவரான Rasikh Aziz, பர்மிங்காமிலுள்ள சட்டக் கல்லூரியில் சேர்ந்து கல்வி பயின்றுவந்துள்ளார். ஒரு குறிப்பிட்ட விடயத்துக்காக அவர் நிர்வாகத்தை அணுகும்போது, எதிர்பாராத ஒரு பிரச்சினை உருவாகியுள்ளது.
மே மாதம் 22ஆம் திகதிக்குள் Rasikh பிரித்தானியாவை விட்டு வெளியேறவேண்டும் என்றும், இல்லையென்றால் அவர் நாடுகடத்தப்படுவார் என்றும் உள்துறை அலுவலகம் அவருக்கு அதிர்ச்சியளிக்கும் தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளது.
Photograph: Andrew Fox/The Observer
என்ன காரணம்?
விடயம் என்னவென்றால், 2023 ஜனவரியில் வகுப்புகள் துவங்க இருப்பதால், Rasikh, 2022 அக்டோபரில் பிரித்தானியா வரவேண்டும் என பல்கலை அவருக்கு தகவலளித்துள்ளது.
அவரும் பிரித்தானியா வந்து பல்கலையில் இணைந்து படித்துக்கொண்டிருக்கிறார்.
அப்போது வேறொரு விடயத்துக்காக அவர் நிர்வாகத்தை அணுகும்போது, அவர் ஜனவரியில்தான் பிரித்தானியாவுக்கு வந்திருக்கவேண்டும். ஆனால், அவர் சில வாரங்கள் முன்கூட்டியே பிரித்தானியா வந்துள்ளார் என கூறியுள்ளார்கள் பல்கலை அலுவலர்கள். அதாவது, பல்கலை நிர்வாகம் Rasikhக்கு தவறான தகவலைக் கொடுத்துவிட்டு, இப்போது Rasikh மீதே குற்றம் சாட்டியுள்ளது.
Photograph: Anna Gordon/Reuters
அத்துடன் நிற்காமல், உள்துறை அலுவலகத்திற்கும் பல்கலை அலுவலர்கள் தகவல் கொடுக்க, தற்போது Rasikh நாட்டை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளார்.
பெரும் தொகை செலவு செய்து கல்வி கற்க வந்த தான், தன் மீது தவறு இல்லாத நிலையிலும், தன் பணமும் நஷ்டமானதுடன், தான் ஒரு குற்றவாளி போல நடத்தப்படுவதாகவும் வருத்தம் தெரிவித்துள்ளார் Rasikh.