வெற்றிமாறனின் படப்பிடிப்பில் சண்டை பயிற்சியாளர் உயிரிழப்பு!
சென்னையில் விடுதலை படப்பிடிப்பின்போது ரோப் கயிறு அறுந்து விழுந்து சண்டை பயிற்சியாளர் உயிரிழந்தார்.
விடுதலை
பிரபல இயக்குநர் வெற்றிமாறன் விடுதலை என்ற படத்தை இயக்கி வருகிறார். விஜய் சேதுபதி, சூரி ஆகியோர் இதில் நடித்து வருகின்றனர்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை கேளம்பாக்கத்தில் நடந்து வருகிறது. இந்த நிலையில் சண்டை பயிற்சியாளர் சுரேஷ் என்பவர், படப்பிடிப்பு தளத்தில் ரோப் கயிறு அறுந்து விழுந்ததில் படுகாயமடைந்தார்.
துரதிர்ஷ்டவசமாக அவர் உயிரிழந்துவிட்டதாக தற்போது செய்தி வெளியாகியுள்ளது.