கொரோனா பரவலுக்கு இது தான் முக்கிய காரணமா? ஆய்வின் முடிவில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்
சீனா நாட்டில் உள்ள லாவோஸில் கொரோனா போன்ற வைரஸை கொண்ட வவ்வால்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுவரை கொரோனா வைரஸ் எங்கிருந்து பரவியது குறித்து தெளிவான தகவல் கிடைக்கவில்லை. விலங்குகளிடம் இருந்து மனிதனுக்கு பரவியதா? அல்லது அனைவரும் பேசப்படுவது போல சீனா ஆய்வகத்திலிருந்து பரவியதா? என்று பல புதிர்கள் நிறைந்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகம் முழுவதும் இதுவரை பல லட்ச மக்கள் உயிரிழந்துள்ளனர். கொரோனா பரவியது குறித்து பல நாட்டில் ஆய்வாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் பிரான்ஸ் நாட்டின் பாஸ்டர் இன்ஸ்டிட்யூட் மற்றும் லாவோஸ் நாட்டின் தேசிய பல்கலைக்கழகம் ஒன்று சேர்ந்து கொரோனா வைரஸ் பரவியது குறித்து ஆராய்ச்சி நடத்தினர்.
அதில் SARS-CoV-2 வைரஸ் குறித்த மரபணுக்கு நிகராக இயற்கையாவே வைரஸ் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அதுவும் இது வடக்கு லாவோஸ் உள்ள சுண்ணாம்பு குகைகளில் வாழும் வவ்வால்களில் இந்த வைரஸ் உள்ளது.
வவ்வால்களில் உள்ள வைரஸ் மற்றும் மனிதரின் உடலில் தாக்கப்பட்ட வைரஸ் இரண்டும் ஒரே நிலையில் உள்ளதாக ஆராய்ச்சிக் குழுவின் தலைவர் மார்க் எலியட் கூறியுள்ளார்.