மெஸ்ஸியை தாண்டி 3 கோல்கள் அடித்த சக அணி வீரர்!
ரெட் புல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இன்டர் மியாமி மிரட்டல் வெற்றி பெற்றது.
மத்தியாஸ் ரோஜாஸ் கோல்
Chase மைதானத்தில் நடந்த MLS தொடர் போட்டியில் இன்டர் மியாமி மற்றும் NY ரெட் புல்ஸ் அணிகள் மோதின.
ஆட்டத்தின் 30வது நிமிடத்தில் ரெட் புல்ஸ் வீரர் டாண்டே வான்ஸியர் கோல் அடித்தார். அதற்கு பதிலடியாய் மியாமியின் மத்தியாஸ் ரோஜாஸ் ஒரு கோல் அடித்தார் (48வது நிமிடம்).
அதன் பின்னர் 50வது நிமிடத்தில் எதிரணி வீரர் தனது கோல் கீப்பரிடம் பாஸ் செய்ய முயன்ற பந்தை, மெஸ்ஸி மின்னல் வேகத்தில் செயல்பட்டு கோலாக மாற்றினார்.
சுவாரஸ் 3 கோல்கள்
அடுத்து ரோஜாஸ் தனது இரண்டாவது கோலை 62வது நிமிடத்தில் அடிக்க, இன்டர் மியாமி 3-1 என முன்னிலை வகித்தது.
மியாமியின் வேகத்திற்கு ரெட் புல்ஸ் ஈடுகொடுக்க முயல்கையில், லூயிஸ் சுவாரஸ் கோல் வேட்டையை தொடங்கினார்.
அவர் மெஸ்ஸி பாஸ் செய்த பந்தை, 68வது நிமிடத்தில் அபாரமாக செயல்பட்டு கோல் அடித்தார். அதன் பின்னர் 75 மற்றும் 81வது நிமிடங்களில் சுவாரஸ் இரண்டு கோல்கள் அடித்து சிம்மசொப்பனமாக விளங்கினார்.
இறுதியாக 90+7வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பில் புல்ஸ் அணிக்கு ஒரு கோல் கிடைக்க, இன்டர் மியாமி 6-2 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |