சுபகிருது தமிழ் வருட பலன்கள் 2022 : மிதுன ராசிக்காரர்களுக்கு பணவரவு தேடி வரபோகுதாம்!
தமிழ் புத்தாண்டு சுபகிருது புது வருடம் ஏப்ரல் 14ஆம் தேதி பிறக்க உள்ளது. 60 தமிழ் வருடங்களில் சுபகிருது வருடம் 36வது ஆண்டாகும்.
புத்தாண்டில் நவ கிரகங்களின் சஞ்சாரம் இடப்பெயர்ச்சியால் மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும், பரிகாரம் என்ன செய்யலாம் என்று பார்க்கலாம்.
பலன்கள்
புதன்பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மிதுன ராசிக்காரர்களே, சுபகிருது ஆண்டில் உங்கள் ராசிநாதன் லாப ஸ்தானத்தில் ராகு உடன் பயணம் செய்யும் போது பிறக்கிறது. கேது ஐந்தாம் வீட்டிலும் பயணம் செய்கிறார். தொழில் வியாபாரத்தில் நிறைய லாபங்கள் கிடைக்கும்.
பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். எதிர்பாராத அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். ஆண்டு முழுவதும் குரு உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் பயணம் செய்கிறார். சுமாரான பலன்களையே கொடுக்கும்.
குரு பயணம் செய்யும் இடம் ஜீவன ஸ்தானமாகும் செய்யும் உத்தியோகம் மற்றும் வியாபாரத்தில் சில தடைகள் ஏற்படும். குருவின் பார்வை குடும்ப வாக்கு ஸ்தானத்தை பார்வையிடுகிறார். நான்காம் வீடான சுக ஸ்தானம் ஆறாம் வீடான ருண ரோக சத்ரு ஸ்தானங்களின் மீது குருவின் பார்வை படுகிறது.
குருவின் பயணம் சுமாராக இருந்தால் பார்வையால் வீடு வண்டி வாகனம் வாங்கலாம். பழைய கடன் பாக்கிகள் வசூலாகும் என்றாலும் நிறைய பண வரவு வரும் நிதி நெருக்கடிகள் நீங்கும்.உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை நெருப்பு வாகனம் போன்றவைகளில் கவனத்தோடும் விழிப்புணர்வோடும் செல்வது அவசியம்.
சனி பகவான் உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் அஷ்டம ஸ்தானத்தில் பயணம் செய்கிறார் அஷ்டம சனி காலம் என்பதால் வம்பு வழக்குகளில் சாதகமான தீர்ப்புகள் கிடைக்க வாய்ப்புள்ளது. அரசியல்வாதிகளுக்கு திடீர் பிரச்சனைகள் ஏற்படும்.
காவல்துறை ராணுவம் தீயணைப்புத்துறையில் பணிபுரிபவர்களுக்கு பரிசுகளும் பாராட்டுகளும் கிடைக்கும். அரசு மூலம் கௌரவப் பதவி உயர்வு தேடி வரும். வேலை தொழில் அதிக முதலீடுகளை தவிர்க்கவும் இல்லாவிட்டால் நஷ்டத்தை சந்திக்க நேரிடும்.
சனிபகவான் சித்திரை 16ஆம் தேதி ஏப்ரல் 29ஆம் தேதி அதிசாரமாக கும்ப ராசிக்கு செல்கிறார் இது ஒன்பதாம் இடம் செல்வதால் அஷ்டமத்து சனியினால் இதுநாள்வரை ஏற்பட்ட பிரச்சினைகள் நீங்கும்.
உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும் குலதெய்வ வழிபாடு முறையாக செய்வதன் மூலம் நிறைய பாதிப்புகள் நீங்கி நன்மைகள் அதிகரிக்கும்.
பரிகாரம்
அம்மன் கோவிலுக்கு செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில் சென்று எலுமிச்சம்பழம் போட்டு மாலையாக சாற்றுவதால் நோய் பாதிப்புகள் நீங்கி உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.
அமாவாசை திதியில் சிவபெருமானுக்கு பச்சரிசி மாவினால் அபிஷேகம் செய்து அம்மனுக்கு பால் பாயசம் நைவேத்தியம் செய்து வணங்க நன்மைகள் அதிகம் நடைபெறும்.