2022 சுபகிருது தமிழ் புத்தாண்டு ஒவ்வொரு ராசிக்கும் எப்படி இருக்கப் போகுது ? துல்லியமான பலன்கள் இதோ

Spiritual Puthandu Rasi Palan
By Kishanthini Apr 13, 2022 02:53 AM GMT
Report

சுபகிருது என்றால் அதிக நன்மைகள் நிறைந்த ஆண்டு என்று பொருள்.

இந்த சுபகிருது தமிழ் புத்தாண்டு பிறக்கும் போது கிரகங்களின் நிலைகளைக் கொண்டு ஒவ்வொரு ராசிக்கும் எப்படி இருக்கும் என்பதை பார்ப்போம்.

மேஷம்

சுபகிருது தமிழ் புத்தாண்டில் மேஷ ராசிக்காரர்களுக்கு சுப விரைய செலவுகள் அதிகரிக்கும். தன்னம்பிக்கையுடனும், சதுர்யமாகவும் நடந்து கொண்டால், நல்ல முன்னேற்றத்தைக் காணலாம்.

குடும்பத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் அதிகரித்து காணப்படும். வெளிநாடு செல்லும் யோகம் உள்ளது. மருத்துவ செலவுகளும் வரும் என்பதால், ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துங்கள்

. அரசு வேலைக்காக தேர்வு எழுதியிருந்தால், இந்த ஆண்டில் வெற்றி கிடைக்கும். திடீர் பண வரவு உண்டு. திருமணமாகாதவர்கள் திருமணம் நடப்பதற்கான வாய்ப்புள்ளது. தம்பதியர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.

ரிஷபம்

2022 சுபகிருது ஆண்டில் ரிஷப ராசிக்காரர்களுக்கு வாழ்வில் பல மாற்றங்கள் ஏற்பட போகிறது. குடும்ப சூழல் மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். இந்த ஆண்டில் உங்கள் குடும்பத்தினருடன் அடிக்கடி குலதெய்வ கோவிலுக்கு சென்று வருவது மிகவும் நல்லது.

இதனால் பல வழிகளில் இருந்து பணம் கைக்கு வரும். சனிப்பெயர்ச்சிக்கு பின் வீடு, வாகனம் போன்ற யோகம் கிடைக்கும். வியாபாரிகளுக்கு வியாபாரம் சிறப்பாக இருக்கும்.

இதுவரை ஆரோக்கியத்தில் சந்தித்து வந்த பிரச்சனைகள் கொஞ்சம் கொஞ்சமாக குறையும். தம்பதிகளுக்கு இடையே இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கி இணக்கம் அதிகரிக்கும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே! இதுவரை நீங்கள் பல பிரச்சனைகளை சந்தித்திருக்கலாம். ஆனால் 2022 சுபகிருது தமிழ் புத்தாண்டு உங்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கப் போகிறது. உங்களின் வாழ்க்கையில் சில திடீர் மாற்றங்கள் ஏற்படப் போகிறது. இந்த ஆண்டில் குடும்பத்தில் நல்ல விசேஷங்கள் நடக்க வாய்ப்புள்ளது.

நீங்கள் கடனாக கொடுத்த பணம் இந்த ஆண்டில் கைக்கு மொத்தமாக கிடைக்கும். தொழில் ரீதியாக முன்னேற்றத்திற்கான பல புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும்.

ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். தம்பதியர்களுக்கு இடையே இருந்த பிரச்சனைகள் நீங்கி, இருவருக்கும் இடையே நல்ல புரிதல் உண்டாகும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணமாகும்.

கடகம்

கடக ராசிக்காரர்களே! 2022 சுபகிருது தமிழ் புத்தாண்டில் உங்களின் கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும். குடும்ப சூழ்நிலை அமைதியாகவும், சந்தோஷமாகவும் இருக்கும். இந்த ஆண்டில் உங்களுக்கு எவ்வளவு செலவு இருந்தாலும், அதற்கேற்ப வரவு இருக்கும்.

இந்த ஆண்டு பண விஷயத்தில் கவனமாக இருங்கள். உங்களின் கடின உழைப்பிற்கான நல்ல பலன் நிச்சயம் கிடைக்கும்.

ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சிறு தொந்தரவுகளை சந்தித்தாலும் நாளடைவில் குறையும். திருமணமாகாதவர்கக்கு இந்த ஆண்டில் திருமணம் நடக்கும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே! 2022 சுபகிருது தமிழ் புத்தாண்டு உங்களுக்கு மகிழ்ச்சிகரமானதாக இருக்கப் போகிறது. இதுவரை எதிலும் தடைகளையும், கஷ்டங்களையும் சந்தித்து வந்த நீங்கள், படிப்படியாக அந்த சூழலில் இருந்து விடுபடுவீர்கள்.

உங்கள் குடும்பத்தில் உள்ள சண்டை சச்சரவுகள் இந்த ஆண்டில் முடிவுக்கு வரும். திடீரென்று அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும். பொருளாதார நிலைமை சிறப்பாக இருக்கும்.

இதுவரை சந்தித்து வந்த ஆரோக்கிய பிரச்சனைகள் குறையும். அடிக்கடி காயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால், சற்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. தம்பதிகளிடையே ஒற்றுமை அதிகரித்து, திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக இருக்கும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களே! 2022 சுபகிருது தமிழ் புத்தாண்டில் உங்கள் குடும்பத்தில் பிரச்சனைகள் ஏற்பட்டாலும், அதற்கு விரைவில் தீர்வு கிடைக்கும். குடும்ப சூழலில் ஏற்ற இறக்கமான நிலை இருக்கும்.

இந்த ஆண்டில் திட்டமிட்டு வாழ்க்கையை நடத்துவது நல்லது. பொருளாதாரத்தில் நல்ல வளர்ச்சி இருக்கும். பெற்றோரின் முழு ஒத்துழைப்பு கிடைக்கும். அதிக ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்பதால் கவனமாக இருங்கள்.

தொழில் ரீதியாக உங்கள் முன்னேற்றத்திற்கான பல நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். இந்த ஆண்டில் அவரசமாக எந்த முடிவுகளையும் எடுக்காதீர்கள். தம்பதிகளுக்கு இடையே உள்ள பிரச்சனைகள் முடிவிற்கு வரும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களே! 2022 சுபகிருது புத்தாண்டில் உங்களின் பிரச்சனைகள் படிப்படியாக குறையும். மாணவர்களுக்கு இந்த ஆண்டு நல்ல ஆண்டாக இருக்கும். வீட்டில் சுபகாரியங்கள் நடக்க வாய்ப்புள்ளது. தேவையற்ற செலவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது.

பணிபுரிபவர்களுக்கு, பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

உங்கள் ஆரோக்கியத்தில் சற்று அதிக கவனம் செலுத்துங்கள். திருமணமான தம்பதிகளுக்கு குழந்தை பேறு கிடைக்கு. தம்பதிகளுக்கு இடையே நல்ல புரிதல் இருக்கும். ஆகவே திருமண வாழ்க்கை சந்தோஷம் நிறைந்து இருக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே! 2022 சுபகிருது தமிழ் புத்தாணடில் அவசரமாக எதையும் செய்யாமல், பொறுமையைக் கடைப்பிடித்தால் நற்பலன்கள் கிடைக்கும். கடன் தொல்லையால் அவதிப்படுபவர்கள், அதிலிருந்து விடுபடுவார்கள்.

திருமணமான தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் இந்த ஆண்டில் கிடைக்கும். தம்பதியருக்கு இடையே உள்ள கருத்துவேறுபாடுகள் நீங்கும். வியாபாரிகள், பணிபுரிபவர்களுக்கு இக்காலத்தில் நற்பலன்கள் கிடைக்கும். புதிய முதலீடு செய்ய நினைத்தால் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

ஆரோக்கியம் சுமாராகவே இருக்கும். அடிக்கடி ஆரோக்கிய பிரச்சனைகளை சந்தித்தாலும், அது பெரிதாக இருக்காது. புதிதாக திருமணமானவர்கள் விட்டுக் கொடுத்து வாழ்ந்தால், வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக இருக்கும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களே! 2022 சுபகிருது ஆண்டில் பிரச்சனைகள் அனைத்திலும் இருந்து விடுபடுவீர்கள். திடீரென்று குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். இந்த ஆண்டில் உங்களை அனைவரும் புரிந்து கொண்டு நடப்பார்கள். தம்பதிகளுக்கு இடையே இருந்த குழப்பங்கள் நீங்கும்.

வருமானம் சிறப்பாக இருக்கும். இந்த ஆண்டில் செலவுகளை திட்டமிட்டு செய்யுங்கள். சொந்தமாக தொழில் செய்வதற்கான வாய்ப்புக்கள் உண்டாகும்.

கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க வெளியே அதிகம் சாப்பிடுவதைத் தவிர்த்திடுங்கள். இந்த ஆண்டில் மன ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்பதால், யோகா, தியானம் போன்றவற்றை தினமும் செய்ய அறிவுறுத்தப்படுகிறது.

மகரம்

மகர ராசிக்காரர்களே! 2022 சுபகிருது தமிழ் புத்தாண்டு சுறுசுறுப்பான ஆண்டாக இருக்கப் போகிறது. இதுவரை எதையும் செய்ய விருப்பம் இல்லாமல் இருந்த நீங்கள், இந்த ஆண்டில் அனைத்தையும் கற்றுக் கொள்ள ஆசைப்படுவீர்கள். குடும்ப சூழல் மகிழ்ச்சிகரமானதாக இருக்கும்.

உடன்பிறப்புகளுக்கு இடையே இருந்த மனக்கசப்புகள் நீங்கும். குடும்ப உறுப்பினர்கள் உங்களை ஊக்குவிப்பார்கள். வீடு, வாகனம் வாங்குவது, விற்பது போன்ற விஷயங்களில் நற்பலன் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு, திறமைக்கு ஏற்ப அங்கீகாரம் கிடைப்பதில் தாமதமாகும்.

பயணம் மேற்கொள்ளும் போது கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. ஆரோக்கிய பிரச்சனைகள் குறையும். சுக்கிரன் அருளால் தம்பதிகளுக்கு திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே! 2022 சுபகிருது தமிழ் புத்தாண்டில் உங்களுக்கு அற்புதமான பலன்கள் கிடைக்கப் போகிறது. இந்த ஆண்டில் உங்கள் குடும்பத்தினரின் முழு ஆதரவும் கிடைக்கும். குடும்பத்தில் எதிர்பாராத நல்ல விஷயங்கள் நடக்கப் போகிறது.

கடந்த கால முதலீடுகள் மற்றும் சேமிப்புகளால் நற்பலன்கள் கிடைக்கப் போகிறது. சுப செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. தொழில், வியாபாரத்தில் நற்பலன்கள் கிடைக்கும்.

ஆரோக்கிய விஷயத்தில் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. தம்பதிகளுக்கு இடையே புரிதல் அதிகரிக்கும். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கப் போகிறது.

மீனம்

மீன ராசிக்காரர்களே! 2022 சுபகிருது தமிழ் புத்தாண்டானது உங்கள் தவறுகளை திருத்திக் கொள்வதற்கான வாய்ப்பை வழங்கவிருக்கிறது. குடும்ப சூழல் ஏற்றஇறக்கமானதாக இருக்கும். இந்த ஆண்டில் எந்த பிரச்சனை வந்தாலும் மனம் தளர்ந்துவிடாமல் தைரியமாக எதிர்த்துப் போராடுங்கள்.

ஆண்டின் நடுப்பகுதியில் குடும்பத்தினரை விட்டு பிரிந்து இருக்க வேண்டிய சூழல் ஏற்படலாம். உங்களுக்கு தேவையானதை கடினமாக போராடிய பின்னரே அடைவீர்கள்.

இந்த ஆண்டில் பொறுமையாக இருந்தால் நற்பலன்களைப் பெறலாம். தொழில் ரீதியாக, பல சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெறுவீர்கள். ஆரோக்கியஙததைப் பொறுத்தவரை, வயிறு தொடர்பான பிரச்சனைகளை சந்திப்பீர்கள்.

உணவில் கவனம் செலுத்தினால் அதைத் தவிர்க்கலாம். மன ஆரோக்கியமாக இருக்க உடற்பயிற்சியை தினமும் செய்யுங்கள். கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டைகள் ஏற்படும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் பெறுவதற்கான வாய்ப்புள்ளது.   

2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், யாழ்ப்பாணம், கோயிலாக்கண்டி, Sevran, France

06 Jan, 2023
மரண அறிவித்தல்

சுதுமலை வடக்கு, கந்தர்மடம்

12 Jan, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, Leicester, United Kingdom

12 Jan, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, Toronto, Canada

09 Jan, 2025
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Scarborough, Canada, Markham, Canada

09 Jan, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Markham, Canada

13 Jan, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

விடத்தற்பளை, நுணாவில் கிழக்கு, கொழும்பு

13 Jan, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பாண்டிருப்பு, காரைதீவு, மட்டக்களப்பு, London, United Kingdom

13 Jan, 2018
33ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம்

21 Dec, 1991
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வவுனிக்குளம், பேர்ண், Switzerland

06 Jan, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, ஏழாலை

31 Dec, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், Breda, Netherlands

16 Dec, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Toronto, Canada

08 Jan, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, ஸ்கந்தபுரம்

04 Jan, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், மாத்தளை, மட்டக்களப்பு, கல்முனை, கிளிநொச்சி, கொழும்பு

05 Jan, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, Manor Park, United Kingdom

13 Dec, 2024
மரண அறிவித்தல்

பூநகரி, கொழும்புத்துறை, புதுக்குடியிருப்பு

09 Jan, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வண்ணார்பண்ணை, பொலிகண்டி, London, United Kingdom

13 Dec, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, Montreal, Canada

11 Jan, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, சூரிச், Switzerland

16 Dec, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany

11 Jan, 2015
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் கிழக்கு, Markham, Canada

10 Jan, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கத்தானை, மீசாலை கிழக்கு, Ottawa, Canada

13 Dec, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Toronto, Canada

07 Jan, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்லைப்பிட்டி 3ம் வட்டாரம், Jaffna, Ivry-sur-Seine, France

12 Jan, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நீராவியடி, நீர்வேலி, Torcy, France

05 Jan, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US