இந்திய கிரிக்கெட் அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளராக சுபதீப் கோஷ் நியமனம்
இந்திய கிரிக்கெட் அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளராக சுபதீப் கோஷ்(subhadeep ghosh) நியமிக்கப்பட்டுள்ளார்.
ஃபீல்டிங் பயிற்சியாளரான சுபதீப் கோஷ்
கடந்த 5 ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட் அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளராக பணியாற்றி வந்த டி.திலீப்பின் ஒப்பந்தக் காலம் முடிவடைந்துள்ளது.

இதனையடுத்து, அவருக்கு பதிலாக இந்திய கிரிக்கெட் அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளராக சுபதீப் கோஷ்(subhadeep ghosh) நியமிக்கப்பட்டுள்ளார்.
57 வயதான சுபதீப் கோஷ், 1994 முதல் 2004 வரை அசாம் மற்றும் ரயில்வே அணிகளுக்காக 17 முதல்தரப் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
மேலும், இந்திய ஏ அணி, இந்திய மகளிர் அணி, ஐபிஎல் தொடரின் டெல்லி கேப்பிட்டல்ஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகளுடன் பணியாற்றியுள்ளார்.

இலங்கைக்கு எதிராக நடைபெற உள்ள 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலிருந்து சுபதீப் கோஷ் இந்திய கிரிக்கெட் அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்க உள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |