நானும் கவினும் உண்மையாக காதலித்தோம்., ஆனால்: சுர்ஜித்தின் சகோதரி சுபாஷினியின் வீடியோ
திருநெல்வேலியில் கவின்குமார் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில், சுர்ஜித்தின் சகோதரி சுபாஷினி வீடியோ வெளியிட்டுள்ளார்.
சுபாஷினி விளக்கம்
தமிழகத்தை உலுக்கிய கவின்குமார் படுகொலை சம்பவத்தில், அவர் காதலித்ததாக கூறப்படும் சுபாஷினி தற்போது வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார்.
The girl's version in Kavin's suspected honour killing case pic.twitter.com/U2naX8X98g
— Thinakaran Rajamani (@thinak_) July 31, 2025
அதில் அவர், "நான்தான் சுபாஷினி. எனக்கும் கவினுக்கும் என்ன நடந்ததுன்னு எனக்கும், அவனுக்கும் மட்டும்தான் தெரியும். எங்க உறவு பத்தியோ, எங்க ரெண்டு பேர பத்தியோ இனி யாரும் தப்பா பேச வேண்டாம். யாருக்குமே எதுவுமே தெரியாது.
உண்மை தெரியாம எல்லாரும் நிறைய பேச வேண்டாம். எங்க அப்பா, அம்மாவுக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.
அவங்கள தண்டிக்கணும்ன்னு நினைக்கிறது தப்பு. அவங்க விட்டுங்க. இந்த சூழ்நிலையில எல்லாரும் அவங்கவங்களுக்கு என்ன தோணுதோ அதையெல்லாமே பேசிட்டீங்க.
நானும் கவினும் உண்மையாக காதலித்தோம். கொஞ்சம் செட்டில் ஆக டைம் தேவைப்பட்டது. மே 30 அன்று சுர்ஜித்தும், கவினும் பேசிக்கிட்டாங்க. அப்பவே அந்த டைம்குள்ள அப்பாகிட்ட சுர்ஜித் சொல்லிட்டான். அப்பா என்கிட்ட கேட்டப்போ இல்லப்பா நான் லவ் பண்ணலன்னு சொல்லிட்டேன்.
ஏன்னா, கவின் என்கிட்ட டைம் கேட்டிருந்தான். இன்னும் 6 மாதம் கழித்து சொல்லு ப்ளீஸ் அப்படின்னு சொல்லிருந்தான். அதனால அப்பாகிட்ட நான் அன்றைக்கு சொல்லல. அதுக்குள்ள இப்படி ஆகிடுச்சு. ரெண்டு பேருக்குள்ள என்ன பேசினாங்கன்னு தெளிவா தெரியாது.
ஆனால், கவினுக்கு போன் பண்ணி சுர்ஜித் 'பொண்ணு கேட்க வாங்க. இவ கல்யாணம் ஆனாதான் என்னோட வேலைய பார்க்க முடியும்' அப்படின்னு சொன்னான்னும் எனக்கு கண்டிப்பா தெரியும். அதுக்கு அப்புறம் 27ஆம் திகதி என்ன நடந்துச்சுன்னா, அன்றைக்கு கவின் வரான்னு எனக்கு தெரியாது.
28ஆம் திகதி மாலைதான் வர சொல்லியிருந்தேன். அவங்க தாத்தாவிற்கு தலையில் பிரச்சனை இருந்ததால, நான் ரூம் பாத்துட்டு அட்மிட் பண்ணனும்ன்னு யோசிச்சிருந்தேன். அப்போ மதியம்தான் கவின் வந்திருக்கான்னே எனக்கு தெரியும். நான் ஐ.பிக்கு கூட்டிட்டு போய்ட்டேன்.
கவின் உள்ளே வந்தான். அவனோட அம்மா, மாமா கிட்ட மட்டும்தான் நான் பேசிட்டு இருந்தேன். அப்போ கவின் அப்படியே வெளியே போய்ட்டான். அம்மாவும், மாமாவும் கிளம்பும்போதுதான் கவின் எங்கே என்று நாங்க யோசிச்சோம். நான் சிகிச்சை முறை பற்றியெல்லாம் சொல்லிட்டு இருந்தேன்.
அப்போது அவனோட அம்மா கால் பண்ணியும், நான் கால் பண்ணியும் கவின் எடுக்கல. அப்புறம் அவங்க அம்மா பசிக்குதுன்னு சொல்ல, சாப்பிட போங்கன்னு சொன்னேன்.
அதுக்குள்ள இப்படி ஆகிடுச்சு. இதை தேவையில்லாம யாரும் இஷ்டத்துக்கு வதந்தியை கிளப்ப வேண்டாம். இத விட்டுடுங்க..,அவ்வளவுதான்" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |