இதை மாதிரியே ஆடினா அவரை ஈசியா அவுட் ஆக்கிடுவாங்க! இந்திய வீரரின் தவறை சுட்டிகாட்டிய பிரபலம்
ஷுப்மன் கில் விளையாடும் முறை அவர் எல்.பி.டபிள்யூ ஆவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதை காட்டுகிறது என வாசிம் ஜாபர் கூறியுள்ளார்.
நியூசிலாந்துக்கு எதிராக கான்பூர் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் பிரமாதமாக 52 ரன்கள் எடுத்த ஷுப்மன் கில் அதை சதமாக மாற்ற 5வது முறையாக தவற விட்டுள்ளார்.
கைல் ஜேமிசன் பந்து ஒன்று உள்ளே வர கிரீசிலிருந்தே அவர் ஆட முற்பட்டு கால்காப்புக்கும் மட்டைக்கும் கேப் விட்டதால் பிளேய்ட் ஆன் ஆகி வெளியேறினார்.
இது குறித்து வாசிம் ஜாபர் கூறுகையில், ஷுப்மன் கில் எல்லா பந்துகளையும் பின்னால் சென்று கிரீசுக்குள் மிகவும் உள்ளே சென்று ஆடுகிறார்.
இதனால் அவர் எல்.பி.டபிள்யூ ஆவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. அவர் ஃபுல் லெந்த் பந்துகளுக்கு தயாராக இருக்க வேண்டும். கிரீசிற்குள் அவர் மிகவும் உள்ளே சென்று ஆடுவதால் முன்னால் வந்து ஆடுவதில் அவருக்கு சிக்கல் இருக்கிறது.
ஃபுல் லெந்த் பந்தை ஆடும்போது அவரது தலை, கால் ஒரே திசையில் பந்தின் திசை நோக்கி முன்னால் வர வேண்டும், பிறகு மட்டையை பந்தின் மேல் செலுத்த வேண்டும்.
ஆனால் அவர் சில வேளைகளில் ஃபுல் லெந்த் பந்துகளுக்கும் பின்னால் செல்கிறார். பிறகு பந்தின் மீது பேட்டை மட்டும் வீசுகிறார். இது தேவையற்ற உத்தி.
அவர் ஃபுல் பந்துகளுக்கு தயாராக இருக்க வேண்டும், ஐபிஎல் தொடரில் தொடக்கத்தில் இறங்குகிறார், ஜூனியர் கிரிக்கெட் நெடுக அவர் தொடக்கத்தில்தான் இறங்குகிறார். எனவே அவர் மிடில் ஆர்டரில் ஆட வேண்டுமெனில் இந்த ஒரு விஷயத்தை அவர் சரி செய்ய வேண்டும்.
ஏனெனில் சர்வதேச பவுலர்கள் இந்த லெந்தில்தான் அதிகம் வீசுவார்கள் என்று ஷுப்மன் கில்லிடம் மாற்ற வேண்டிய விடயங்கள் குறித்து பேசியுள்ளார்.