பிரபல நிறுவனத்தை காலி செய்த காதல் ஜோடி: பல பில்லியன் மதிப்புள்ள நிறுவனத்தின் பின்னணி கதை
போட்டோ ஷாப் என்ற புகழ்பெற்ற போட்டோ கிராபிக்ஸ் செயலியை காலி செய்த கேன்வா நிறுவனத்தின் வெற்றி கதையை இந்த செய்தி சுருக்கத்தில் பார்ப்போம்.
முதல் சிந்தனை
போட்டோ மற்றும் கிராபிக்ஸ் டிசைன்களுக்கு முன்னோடியாக அடோப் போட்டோஷாப் கோலோச்சி வந்த நிலையில், அதிலிருக்கும் கடினமான செயல்பாட்டு தன்மையை கண்டறிந்த மெலனி பெர்கின்ஸ், இந்த சிக்கலின் பின்னணியில் இருக்கும் மிகப்பெரிய வணிக வாய்ப்பையும் கண்டறிந்தார்.
அவுஸ்திரேலியாவின் பெர்த் நகரில் 1987ஆம் ஆண்டு பிறந்த மெலனி பெர்கின்ஸ், சிறுவயது முதலே புதுமை மற்றும் படைப்பாற்றலில் அதிக ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளார்.
தகவல் தொடர்பு, உளவியல், வர்த்தகம் உள்ளிட்ட படிப்புகளை நிறைவு செய்த பெர்கின்ஸ், மாணவர்களுக்கு கிராபிக்ஸ் டிசைனிங் பயிற்று விக்கும் ஆசிரியையாகவும் இருந்துள்ளார்.
அப்போது போட்டோஷாப்-பை மாணவர்கள் கற்றுக் கொள்வதில் ஏற்படும் சிக்கல்களை பெர்கின்ஸ் உணர்ந்து கொண்டுள்ளார்.
மேலும் இதன் பின்னால் மிகப்பெரிய வணிக வாய்ப்பு இருப்பதையும் பெர்கின்ஸ் உணர்ந்துள்ளார், பின் எந்தவொரு தொழில்நுட்ப அனுபவமும் இல்லாதவர்கள் கூட கிராபிக் டிசைன் செய்ய கூடிய அளவில் ஒரு தளத்தை உருவாக்க பெர்கின்ஸ் திட்டமிட்டுள்ளார்.
பல கோடி மதிப்பிலான நிறுவனம்
பெர்கின்ஸ் தன்னுடைய இளம் வயது தோழரும், தற்போதைய கணவருமான கிளிஃப் ஒப்ரெக்ட் உடன் இணைந்து 2007ஆம் ஆண்டில் ஃபியூஷன் புக்ஸ் தனது ஐடியாவை ஒரு நிறுவனமாக தொடங்கினார்.
தனது ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் ஐடியாவை கொண்டு சென்று பல முதலீட்டாளர்களிடம் விவரித்துள்ளார், ஆனார் நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த ஐடியாவை ஏற்றுக் கொள்ளவில்லை.
ஆனால் இறுதியில் கூகுள் மேப்ஸின் இணை நிறுவனரான லார்ஸ் ராஸ்முசென் உடனான சந்திப்புக்கு பிறகு பெர்கின்ஸின் ஐடியா அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளது.
இதன் மூலம் டெம்ப்ளேட்கள், படங்கள் மற்றும் வடிவமைப்பு கூறுகளை கொண்டு ’டிராக் அண்ட் ட்ராப்’ என்ற எளிமையான முறையில் கிராபிக்ஸ்களை வடிவமைக்கும் கேன்வா மென்பொருள் உருவெடுத்தது.
நாட்கள் செல்ல செல்ல கேன்வா மக்களிடம் வரவேற்பை பெற்றதோடு, Canva Pro, Canva for Enterprise மற்றும் Canva for Education என நிறுவனம் விரிவடைந்தது.
2021ம் ஆண்டின் தனியாளர் முதலீட்டாளர்களால் கேன்வா சுமார் $40 பில்லியன் நிறுவனம் மதிப்பிடப்பட்டது.
கேன்வா நிறுவன வெற்றி மூலம் மெலனி பெர்கின்ஸ் மற்றும் அவரது கணவர் கிளிஃப் ஒப்ரெக்ட் ஆகியோரின் காதல் பயணம் உலக பணக்காரர் பட்டியலில் இடம்பெற காரணம் ஆகி உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |