போரில் சிக்கிய பிரித்தானிய மக்கள்... கோப்ரா அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த பிரதமர் ரிஷி சுனக்
சூடானின் உள்நாட்டுப் போரில் சிக்கியுள்ள ஆயிரக்கணக்கான பிரித்தானியர்களை மீட்கும் பொருட்டு, கோப்ரா கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார் பிரதமர் ரிஷி சுனக்.
ரிஷி சுனக் தலைமையில் கோப்ரா கூட்டம்
சூடானில் இருந்து பிரித்தானிய மக்கள் மற்றும் தூதர்களை வெளியேற்ற இங்கிலாந்து அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதன் ஒருபகுதியாக ஏற்கனவே நேற்று இரு கோப்ரா கூட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தற்போது பிரதமர் ரிஷி சுனக் தலைமையில் பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் வெளிவிவகார அமைச்சகத்தின் முக்கிய அமைச்சர்களுடன் கோப்ரா கூட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட உள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, பிரித்தானிய அரசாங்க செய்தித்திடர்பாளர் தெரிவிக்கையில், சூடானில் நடந்துவரும் சண்டையில் சிக்கியுள்ள பிரித்தானிய பிரஜைகளின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதை அரசாங்கம் கவந்த்தில் கொண்டுள்ளது.
கார்ட்டூமில் உள்ள பிரித்தானிய பிரஜைகள் மற்றும் தூதரக ஊழியர்களுக்கு உதவ முடிந்த அனைத்தையும் செய்து வருகிறோம். மட்டுமின்றி, பாதுகாப்பு அமைச்சகம் வெளிவிவகார அலுவலகத்துடன் இணைந்து உரிய நடவடிக்கைகளுக்கு தயாராக உள்ளது என்றார்.
இங்கிலாந்து துருப்புக்கள் தயார்
சூடானில் வெடித்துள்ள உள்நாட்டுப் போரில் இதுவரை 400 பேர்கள் கொல்லப்பட்டதாகவும் ஆயிரக்கணக்கானோர் காயங்களுடன் தப்பியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இந்த நிலையில், பிரித்தானிய மக்கள் மற்றும் அதிகாரிகளை வெளியேற்றும் பொருட்டு இங்கிலாந்து துருப்புக்கள் தயார் நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
@PA
உரிய திட்டத்துடன் மட்டுமே தற்போதைய சூழலில் துருப்புகளை சூடானுக்கு அனுப்ப வேண்டும் என்ற கருத்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2021ல் தாலிபான் ஆட்சியை கைப்பற்றிய நிலையில் காபூல் நடவடிக்கைக்கு பிறகு மிகப்பெரிய வெளியேற்றும் நடவடிக்கை என்பதால், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான RAF C-17 போக்குவரத்து விமானங்களும் தயார் நிலையில் உள்ளன.
பிரித்தானிய பிரஜைகளை வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு தூதரக அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளதுடன், மேலதிக தகவல்களுக்காக தங்கள் பயண ஆலோசனையைப் பின்பற்றவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.