பிரித்தானியா நோக்கிச் சென்றுகொண்டிருந்த லொறி..குதிக்க முயன்ற புலம்பெயர் நபர் உயிரிழப்பு
Sudan migrant youth dies after failed jump lorry: பிரான்ஸில் பிரித்தானியா நோக்கி சென்றுகொண்டிருந்த லொறி மீது குதிக்க முயன்ற புலம்பெயர்ந்த ஒருவர் உயிரிழந்தார்.
பிரான்ஸின் Calais சாலை சுங்கச்சாவடியின் உச்சியில் இருந்து, பிரித்தானியா நோக்கி சென்றுகொண்டிருந்த லொறி ஒன்றின் மீது குதிக்க முயன்ற சூடானிய நபர் உயிரிழந்துள்ளார்.
22 வயது இளைஞர்
பிரான்ஸ் நாட்டின் Pas-de-Calais பகுதியில் உள்ள செட்க்ஸ் சுங்கச்சாவடியின் வழியாக பிரித்தானியா நோக்கி லொறி ஒன்று சென்றுகொண்டிருந்தது.
அப்போது சுங்கச்சாவடியின் கட்டமைப்பின் உச்சியில் இருந்த 22 வயது இளைஞர் ஒருவர், அந்த லொறியின் மீது குதிக்க முயன்றுள்ளார்.
ஆனால், அவர் வாகனத்தை சரியாக அடைய முடியாததால், அதற்கு பின்னால் சாலையில் கீழே விழுந்துள்ளார். இதில் படுகாயமடைந்த குறித்த இளைஞர், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
துரதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு
துரதிர்ஷ்டவசமாக ஞாயிற்றுக்கிழமை மதியம் அந்நபர் உயிரிழந்தார். விசாரணையில் குறித்த இளைஞர் சூடானைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. உயிரிழந்தவரின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
அதே சமயம், சம்பவ இடத்தில் இருந்த மற்றொரு நபர் சில நிமிடங்களுக்கு முன்னர் அதே வாகனத்தில் வெற்றிகரமாக ஏறி சென்றுள்ளார்.
Calais துறைமுகம் மற்றும் சேனல் சுரங்கப்பாதையை சுற்றியுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் இருந்தபோதிலும், புலம்பெயர்ந்தோர் லொறிகளில் மறைந்து பிரித்தானியாவை அடைய முயற்சிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |