சாய் சுதர்சன்-சுப்மன் கில் அதிரடி: 10 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தி குஜராத் அபார வெற்றி!
அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அபார வெற்றி பெற்றுள்ளது.
ஐபிஎல் 2025
அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இந்த 60-வது ஐபிஎல் லீக் போட்டியில், நாணய சுழற்சியில் வென்ற குஜராத் டைட்டன்ஸ் முதலில் பந்துவீச தீர்மானித்தது.
இதையடுத்து களமிறங்கிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 199 ஓட்டங்களை குவித்தது.
KL goes down the ground, KL goes out of the ground 🔥pic.twitter.com/HoFQAgFMMh
— Delhi Capitals (@DelhiCapitals) May 18, 2025
தொடக்க வீரர் கே.எல்.ராகுல் அதிரடியாக விளையாடி சதம் அடித்தார். அவர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 112 ஓட்டங்கள் எடுத்தார்.
அபிஷேக் பொரெல் 30 ஓட்டங்களும், அக்சர் படேல் 25 ஓட்டங்களும், ஸ்டப்ஸ் 21 ஓட்டங்களும் எடுத்து டெல்லி அணிக்கு கணிசமான பங்களிப்பை வழங்கினர்.
குஜராத் அபார வெற்றி
200 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான சாய் சுதர்சனும், சுப்மன் கில்லும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
சுப்மன் கில் அரைசதம் கடந்து அசத்தினார். மறுபுறம் சாய் சுதர்சன் சதம் விளாசி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.
இறுதியில், குஜராத் டைட்டன்ஸ் அணி 19 ஓவர்களில் இலக்கை எட்டி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
சாய் சுதர்சன் 108 ஓட்டங்களுடனும், சுப்மன் கில் 93 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
Opening pair that screams 𝐁𝐨𝐱-𝐨𝐟𝐟𝐢𝐜𝐞 🎬
— Gujarat Titans (@gujarat_titans) May 18, 2025
Highest successful chase in #TATAIPL history without any loss 🥳 pic.twitter.com/i28nQm9UUo
இந்த வெற்றியின் மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி நடப்பு ஐ.பி.எல். தொடரில் தனது 9-வது வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |