கனடாவில் அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசிக்கு திடீர் தடை! என்ன காரணம்?
கனடாவில் ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா கொரோனா வைரஸ் தடுப்பூசியை 55 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு பயன்படுத்துவதற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியால் இரத்த உறைவு பிரச்சினை ஏற்படும் அபாயம் இருப்பதாக எழுப்பப்பட்ட புகார்களையடுத்து, கனடாவின் நோய்த்தடுப்புக்கான தேசிய ஆலோசனைக் குழு NACI, பாதுகாப்பு காரணங்களுக்காக இடைநிறுத்தத்தை பரிந்துரைத்தது.
அதனைத் தொடர்ந்து திங்கட்கிழமையன்று கனேடிய மாகாணங்கள் இடைநீக்கத்தை அறிவித்தன.
ஐரோப்பாவில் அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி போட்ட பின்னர் அரிய இரத்த உறைவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் பெரும்பாலானவர்கள் 55 வயதிற்குட்பட்ட பெண்கள் என்றும், அதனால் இறப்பு விகிதம் 40% வரை அதிகமாக இருப்பதாகவும் NACI தெறிவித்தது.
அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியைப் பயன்படுத்துவதை தற்காலிகமாக நிறுத்திய பல ஐரோப்பிய நாடுகள், தடுப்பூசி பாதுகாப்பானது என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் மருந்து கட்டுப்பாட்டாளர் European Medicines Agency கூறியதையடுத்த, அதை மீண்டும் வழங்கத் தொடங்கியுள்ளன.
இதற்கிடையில், கனடாவில் இரத்த உறைவால் பாதிக்கப்பட்டதாக எந்த அறிக்கையும் கிடைக்கவில்லை என்று Health Canada தெரிவித்துள்ளது.
இருப்பினும், பாதுகாப்பு காரணங்களுக்காக 55 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியை பயன்படுத்த கனடா அரசு தற்காலிக தடை விதித்துள்ளது.