கண்ணை மூடி பிரார்த்தனையில் இருந்த போது திடீரென குண்டுவெடிப்பு: பெண் ஒருவர் வேதனை
இந்திய மாநிலம் கேரளாவில் ஏற்பட்ட குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஏற்பட்ட நிகழ்வுகள் குறித்து சம்பவ இடத்தில் இருந்தவர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
குண்டு வெடிப்பு
நேற்று, கேரளாவில் கொச்சி அருகே களமச்சேரியில் உள்ள சர்வேதேச மாநாட்டு அரங்கில் கிறிஸ்தவ பிரிவின் கீழ் யெகோவாவின் சாட்சிகள் பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றது.
அங்கு, அவர்கள் பிரார்த்தனை செய்ய தொடங்கிய சில நிமிடங்களிலேயே குண்டு வெடிப்பு நடந்தது. உடனே, பெண்கள் மற்றும் குழந்தைகள் என அனைவரும் அலறியடித்து ஓடினர்.
இந்த குண்டு வெடிப்பில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். 52 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வேதனை
இந்த குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் இருந்த வயதான பெண் ஒருவர் கூறுகையில், "கண்ணை மூடி பிரார்த்தனையில் இருந்த போது திடீரென வெடிச்சத்தம் கேட்டது.
நான் கண்ணை திறந்து பார்த்ததும் என் கண்முன்னே பந்து வடிவில் தீப்பற்றி எரிந்தது. பலரும் அலறியடித்து ஓடினர். மிகவும் பயங்கரமான தருணம்" என்றார்.
மேலும் ஒரு முதியவர் கூறுகையில், நான் கண்ணை திறந்து பார்த்த போது தீப்பற்றி எரிந்தது. எல்லோரும் கூச்சலிட்டு ஓடிக்கொண்டிருந்தனர். நான் இதுவரை பல பிரார்த்தனை கூட்டங்களில் கலந்து கொண்டிருக்கிறேன். ஆனால், இதுபோன்ற சம்பவங்கள் நடந்ததில்லை" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |