கல்லூரி மாணவர் திடீரென மரணம்: இரவில் பரோட்டா சாப்பிட்டது காரணமா?
தமிழகத்தில் பரோட்டா சாப்பிட்ட கல்லூரி மாணவர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கல்லூரி மாணவர்
திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஹேமச்சந்திரன் கோவை மாவட்டம் சூலூர் கண்ணம்பாளையத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவர் கல்லூரிக்கு அருகே சக மாணவர்கள் 4 பேருடன் அறை எடுத்து தங்கியுள்ளார்.
சம்பவம் நடைபெற்ற அன்று இரவு கண்ணம்பாளையம் பகுதியில் உள்ள ஹொட்டல் ஒன்றில் ஹேமச்சந்திரன் தனது நண்பர்களுடன் பரோட்டா சாப்பிட்டதாக கூறப்படுகிறது. பின்னர், வழக்கம்போல தனது அறைக்கு தூங்குவதற்கு சென்றுள்ளார்.
இந்நிலையில், இன்று காலை சக மாணவர்கள் ஹேமச்சந்திரனை பார்த்தபோது அவர் அசைவில்லாமல் கிடந்துள்ளார்.
மாணவர் மரணம்
இதனையடுத்து, ஹேமச்சந்திரனை ஆம்புலன்ஸ் மூலம் பாப்பம்பட்டி பிரிவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மாணவர் ஏற்கனவே உயிரிழந்ததாக கூறியுள்ளனர்.
பின்னர், இந்த தகவலை சக மாணவர்கள் அவரது பெற்றோருக்கு தெரிவித்தனர்.மேலும், சூலூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலறிந்த பொலிஸார் வழக்குப்பதிவு செய்து, ஹேமச்சந்திரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மாணவர் பரோட்டா சாப்பிட்டதால் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |