ஜேர்மன் வெளியுறவுத்துறை அமைச்சர் உக்ரைனுக்கு திடீர் பயணம்
ஜேர்மன் வெளியுறவுத்துறை அமைச்சர் இன்று உக்ரைன் பயணிக்க இருக்கிறார்.
ரஷ்யா உக்ரைனை ஊடுருவ முயற்சி மேற்கொண்டிருக்கும் நிலையில், மூன்று வாரங்களில் இரண்டாவது முறையாக ஜேர்மன் வெளியுறவுத்துறை அமைச்சரான Annalena Baerbock உக்ரைன் பயணிப்பதால், இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
உக்ரைனுக்கு ஜேர்மனி ஆயுதங்கள் விற்பனை செய்ய மறுத்துள்ளதுடன், மற்ற நாடுகளையும் ஆயுதங்கள் விற்பனை செய்ய அந்நாடு தடுத்துவருவதால் உக்ரைன் அதிகாரிகள் தங்கள் விரக்தியை தொடர்ந்து வெளிப்படுத்திவருகிறார்கள்.
உக்ரைனில் Baerbockஇன் திட்டம் என்ன?
ஜேர்மன் வெளியுறவுத்துறை அமைச்சரான Annalena Baerbock, உக்ரைன் அதிபர் Volodymyr Zelenskyyஐயும் வெளியுறவு அமைச்சர் Dmytro Kulebaவையும் சந்தித்துப் பேச உள்ள நிலையில், அவர்களது பேச்சில் ஆயுதங்கள் ஏற்றுமதி குறித்த விடயங்கள் முக்கிய பேசுபொருளாக இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Baerbock உக்ரைனுக்குச் சென்றுள்ள அதே நேரத்தில், ஜேர்மன் சேன்ஸலரான Olaf Scholz அமெரிக்க வெள்ளை மாளிகைக்கு முதன்முறையாக சென்றுள்ளார்.
மொத்தத்தில், ஜேர்மனியின் உக்ரைன், அமெரிக்கா, ரஷ்யா என பல தூதரக பயணங்களின் நோக்கம், முடிந்தவரையில் உக்ரைனில் போர் ஏற்படாமல் தடுப்பதற்காகத்தான் என்பது குறிப்பிடத்தக்கது.