பெண்ணுக்கு கொடுக்கும் மரியாதையா இது? விமான நிலையத்திலிருந்து நடிகை சுதா சந்திரன் உருக்கமாக பேசி வெளியிட்ட வீடியோ
விமான நிலையத்தில் ஒவ்வொரு முறையும் தான் தடுத்துநிறுத்தப்படுவதாக கூறி நடிகை சுதா சந்திரன் ஒரு உருக்கமான வீடியோவை வெளியிட்டுள்ளார்.
தமிழில் சர்வம் சக்திமயம், சின்னதம்பி பெரியதம்பி, சின்னப்பூவே மெல்லபேசு, விழித்திரு போன்ற பல படங்களில் நடித்துள்ளவர் சுதா சந்திரன். பரதநாட்டிய கலைஞரான இவர் இந்தி திரைப்படங்கள் பலவற்றிலும் நடித்துள்ளார்.
இந்த நிலையில் அவர் உருக்கமான வேண்டுகோள் விடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தன்னைப் போன்ற மூத்த குடிமக்கள் விமான நிலைய அதிகாரிகளால் "அவமானப்படுத்தப்படுவதை" தவிர்க்கலாம் என்று நடிகை கூறி உள்ளார்.
சுதா பேசுகையில், மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் ஒரு வேண்டுகோள், நான் சுதா சந்திரன், ஒரு நடிகர் மற்றும் நடனக் கலைஞர், நான் ஒரு செயற்கை மூட்டுடன் நடனமாடி வரலாற்றை உருவாக்கி, என் நாட்டை பெருமைப்படுத்தினேன்.
Renowned actress and Bharatnatyam dancer #SudhaaChandran has made a personal appeal to Prime Minister Narendra Modi after being grilled multiple times at airports regarding her prosthetic leg. pic.twitter.com/EEcMZuknEJ
— Filmfare (@filmfare) October 22, 2021
ஆனால் ஒவ்வொரு முறையும் நான் எனது தொழில்முறை பயணம் செல்லும்போது நான் விமான நிலையத்தில் நிறுத்தப்படுகிறேன், என் செயற்கை மூட்டு உறுப்பை அகற்றி அவர்களிடம் காட்ட வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள்.
அது மனிதனால் சாத்தியமா மோடிஜி? நம் நாடு இதைப் பற்றி பேசுகிறதா? நம் சமூகத்தில் ஒரு பெண் இன்னொரு பெண்ணுக்கு கொடுக்கும் மரியாதையா இது? மூத்த குடிமக்களுக்கு ஒரு சிறப்பு அடையாள அட்டையை வழங்குங்கள் என்பதே எனது பணிவான வேண்டுகோள்.
விமான நிலையத்தில் இருந்து அவர் இந்த வீடியோவை வெளியிட்டு உள்ளார். ஒவ்வொரு முறையும் இந்த கிரில் வழியாக செல்லும் போது மிகவும் வலிக்கிறது, எனது செய்தி மாநில மற்றும் மத்திய அரசு அதிகாரிகளுக்கு சென்றடையும் என்று நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.