இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தியின் சர்ச்சை கருத்தை ஆதரித்து பேசிய சுதா மூர்த்தி
இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தியின் '70 மணி நேர வேலை' குறித்த கருத்தை அவரது மனைவி சுதா மூர்த்தி ஆதரித்து பேசியுள்ளார்.
நாராயண மூர்த்தியின் "இளைஞர்கள் வாரத்தில் 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும்" என்ற கருத்து பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.
இதற்குப் பதிலளித்த சுதா மூர்த்தி, உண்மையான ஆர்வமுள்ளவர்களுக்கு நேர வரம்பு குறித்து சிந்திக்கமாட்டார்கள் என்று NDTV-க்கு அளித்த நேர்காணலில் கூறினார்.
"இன்ஃபோசிஸ் நிறுவப்பட்ட காலத்தில், என் கணவர் வாரத்திற்கு 70 மணி நேரத்திற்கும் அதிகமாக உழைத்தார். வெற்றிக்கு அதுவே முக்கியம்," என அவர் கூறியுள்ளார்.
தன்னுடைய குடும்ப வாழ்க்கையில் செய்த தியாகங்கள் பற்றியும், கணவரின் நீண்ட நேரப் பணியினை புரிந்து கொண்டு வருந்தாமல் சமாளித்த விதத்தையும் கூறினார். "அவருக்கு இது மிகப் பெரிய கனவு, அதனால் நான் அதை குறையாக கூறவில்லை" என்றார்.
"பணி நேரத்திற்கு மட்டுமல்ல, ஆர்வத்திற்கு முக்கியத்துவம் அளித்தார். மருத்துவர்கள், பத்திரிகையாளர்கள் போன்றவர்கள் நீண்ட நேரம் உழைப்பது சாதாரணம். ஆர்வமிருந்தால் வேலை நேரம் பிரச்சினையாக இருக்காது," என்று சுதா மூர்த்தி கூறியுள்ளார்.
நேரத்தைக் குறைகூறுவதை விட, அதன் பயனை உணர வேண்டும் என்று கூறிய அவர், "நாம் அனைவருக்கும் ஒரே 24 மணி நேரமே உள்ளது. அதை எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதே முக்கியம்," என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |