ஒரே ஆண்டில் ரூ.208 கோடியை அள்ளிக்கொடுத்த தென்னிந்தியர்... ஜனாதிபதி ஒபாமாவின் நம்பிக்கை பெற்றவர்: யாரிவர்
இந்தியாவில் மிகவும் கொண்டாடப்படும் நன்கொடையாளர்களில் ஒருவரான இன்ஃபோசிஸ் அறக்கட்டளையின் தலைவர் சுதா மூர்த்தியின் உறவினர் ரூ 208 கோடி நன்கொடையாக அளித்துள்ளார்.
இந்திய மதிப்பில் ரூ 208 கோடி
சுதா மூர்த்தியின் சகோதரியின் கணவரான குருராஜ் தேஷ்பாண்டே என்பவரே இந்திய மதிப்பில் ரூ 208 கோடியை ஒரே ஆண்டில் நன்கொடையாக அளித்தவர். கல்வி தொடர்பான அமைப்புகளுக்கே தேஷ்பாண்டே அதிகமாக நன்கொடை அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில தசாப்தங்களில் மட்டும் தேஷ்பாண்டே தமது நிறுவனங்கள் பலவற்றை விற்பனை செய்துள்ளார். அவர் தனது முதல் நிறுவனமான Coral Networks ஐ 1993ல் 15 மில்லியன் டொலருக்கு விற்றார்.
Cascade Communications என்ற நிறுவனத்தையும் தேஷ்பாண்டே விற்றுள்ளார். மட்டுமின்றி, அவர் நிறுவிய பல நிறுவனங்களில் ஒன்றை 1997ல் 3.7 பில்லியன் டொலருக்கு விற்றுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ஒபாமா
கர்நாடகாவின் ஹூப்ளி பகுதியில் பிறந்த தேஷ்பாண்டே இந்தியாவில் பட்டப்படிப்பு முடித்த பின்னர் மேற்படிப்புக்காக கனடாவுக்கு சென்றுள்ளார். தற்போதும் A123Systems, Sycamore Networks, Tejas Networks, HiveFire, Sandstone Capital மற்றும் Sparta குழுமம் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு குருராஜ் தேஷ்பாண்டே தலைவராக உள்ளார்.
இவரது தற்போதைய சொத்து மதிப்பு என்பது 7.6 பில்லியன் அமெரிக்க டொலர் என்றே கூறப்படுகிறது. ஜூலை 2010ல் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமா உருவாக்கிய தேசிய ஆலோசனைக் குழுவில் துணை தலைவராக குருராஜ் தேஷ்பாண்டேவை நியமித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |