குளோபல் இந்தியன் விருதை வென்ற முதல் பெண்! பெருமையை பெற்ற சுதா மூர்த்தி
குளோபல் இந்தியன் விருதை வென்ற முதல் பெண்மணி என்ற பெருமையை சுதா மூர்த்தி பெற்றார்.
இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் என்.ஆர். நாராயண மூர்த்தியின் மனைவியும், புகழ்பெற்ற எழுத்தாளரும், பரோபகாரருமான சுதா மூர்த்தி, கனடா இந்தியா அறக்கட்டளையின் குளோபல் இந்தியன் விருதைப் பெற்றுள்ளார்.
குளோபல் இந்தியன் விருது, $50,000 மதிப்பிலானது, அந்தந்த துறைகளில் சிறந்து விளங்கும் இந்தியர்களுக்கு வழங்கப்படுகிறது.
கனடா இந்தியா அறக்கட்டளை சனிக்கிழமை இரவு ரொறொன்ரோ காலா நிகழ்வில் சுதா மூர்த்தியை கௌரவித்தது.
இரு நாடுகளுக்கிடையேயான கலாச்சார இடைவெளியைக் குறைத்ததற்காக இந்திய-கனடிய புலம்பெயர்ந்தோருக்கு மூர்த்தி நன்றி தெரிவித்ததோடு, அங்கீகாரத்திற்கு நன்றி தெரிவித்தார்.
சுதா மூர்த்தி இந்த விருதுத் தொகையை ரொறன்ரோ பல்கலைக்கழகத்தில் உள்ள தி ஃபீல்ட் இன்ஸ்டிட்யூட்டுக்கு நன்கொடையாக வழங்கினார், இது கணிதம் மற்றும் பல்வேறு துறைகளில் அதன் பங்களிப்புகளுக்காக அறியப்படுகிறது.
பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் சுதா மூர்த்தியின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது. அக்ஷதா மூர்த்தி ரிசகி சுணக்கின் மனைவி ஆவார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Sudha Murty, First Female Recipient of Global Indian Award, Sudha Murty Global Indian Award, Rishi Sunak, Akshata Murty, NR Narayana Murthy Wife