அம்பானி வீட்டுத் திருமணத்துக்கு எளிமையாக வந்த கோடீஸ்வரர் மனைவி
ஆனந்த் அம்பானியின் திருமணத்துக்கு வந்திருந்த உலகப் பிரபலங்கள் பலர், மிகவும் ஆடம்பரமாக வந்திருந்தார்கள்.
விலையுயர்ந்த உடையும் நகைகளுமாக வந்திருந்தவர்கள் மத்தியில், கழுத்தில் தாலி மட்டும் அணிந்து திருமணத்தில் பங்கேற்றுள்ளார் கோடீஸ்வரர் ஒருவரின் மனைவி
எளிமையாக வந்த கோடீஸ்வரர் மனைவி
அவர் வேறு யாருமில்லை, இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் நிறுவனரான நாராயணமூர்த்தியின் மனைவியும், முன்னாள் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கின் மாமியாருமான சுதா மூர்த்திதான்.
ஆனந்த் அம்பானியின் திருமணம் என்பதற்காக சுதா மூர்த்தி அவர்கள் தன் எளிமையை மாற்றிக்கொள்ளவில்லை என ஒருவர் புகழ்ந்துள்ளார்.
தங்கள் ஆடம்பரத்தை வெளிச்சம்போட்டுக் காட்டும் கோடீஸ்வரர்கள் மத்தியில் ’எளிமையே உருவாக சுதா மூர்த்தி’ என மற்றொருவர் கூற, பிரபலங்களும் அவரது எளிமையை சமூக ஊடகங்களில் பாராட்டியுள்ளதுடன், அவருடன் புகைப்படம் எடுக்கவும் போட்டி போட்டிருக்கிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |