596 பந்துகளில் 299 ரன் விளாசிய வீரர்! முச்சதத்தை தவறவிட்டவரை பாராட்டிய எதிரணி வீரர்கள் (வீடியோ)
ரஞ்சி தொடரில் பெங்கால் அணி வீரர் சுதிப் குமார் காரமி ஆந்திரா அணிக்கு எதிராக 299 ஓட்டங்கள் விளாசினார்.
3வது காலிறுதி போட்டி
ஆந்திரா, பெங்கால் அணிகளுக்கு இடையிலான ரஞ்சி கிண்ணத் தொடரின் 3வது காலிறுதி போட்டி நடந்து வருகிறது.
Cricket can be cruel 💔
— Cricbuzz (@cricbuzz) February 9, 2026
299 for Sudip Gharami in a Ranji Trophy quarter-final. A knock that deserved 300 👏pic.twitter.com/IvEbKEn1zj
ஆந்திர அணி முதல் இன்னிங்ஸில் 295 ஓட்டங்கள் எடுக்க, பெங்கால் அணி தனது இன்னிங்ஸை தொடங்கியது.
ஆரம்பத்தில் விக்கெட்டுகள் சரிய நங்கூரமாய் நின்று ஆடிய சுதிப் குமார் காரமி (Sudip Kumar Gharami) இரட்டை சதம் அடித்தார்.
சுமந்தா குப்தா 81 ஓட்டங்களும், ஷாகிர் ஹபிப் 95 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
சுதிப் குமார் அபாரம்
முச்சதத்தை நோக்கி பயணித்த சுதிப் 299 (596) ஓட்டங்களில் இருந்தபோது ஷைக் ரஷீத் பந்துவீச்சில் போல்டு ஆனார்.
அவரை சக வீரருடன் எதிரணி வீரர்களும் பாராட்ட, ஒட்டுமொத்த பார்வையாளர்களும் கைத்தட்டல்களை செய்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
கடைசி கட்டத்தில் அதிரடி காட்டிய மொஹம்மது ஷமி 33 பந்துகளில் 3 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 53 ஓட்டங்கள் விளாசி ஆட்டமிழக்க, பெங்கால் அணி 629 ஓட்டங்கள் குவித்தது. ஷைக் ரஷீத் 4 விக்கெட்டுகளும், சசிகாந்த் மற்றும் சௌராப் குமார் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஆந்திர அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 108 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |