12 சிக்ஸர், 8 பவுண்டரிகள்! 54 பந்துகளில் 125 ஓட்டங்கள் விளாசிய வீரர்
Sudur paschim royals beat lumbini lions by 10 wickets: நேபாள பிரீமியர் லீக்கில் ஸ்கொட்லாந்தின் ஜார்ஜ் முன்சி அதிரடி சதம் விளாசினார்.
லும்பினி லயன்ஸ் அணிக்கு எதிரான நேபாள பிரீமியர் லீக் போட்டியில், ஸ்கொட்லாந்து வீரர் ஜார்ஜ் முன்சி 54 பந்துகளில் 125 ஓட்டங்கள் விளாசினார்.
ஜார்ஜ் முன்சி ருத்ரதாண்டவம்
சுதுர் பஸ்ச்சிம் ராயல்ஸ் மற்றும் லும்பினி லயன்ஸ் அணிகளுக்கு இடையிலான நேபாள பிரீமியர் லீக் போட்டி கிர்திபூரில் நடந்தது.
முதலில் ஆடிய லும்பினி லயன்ஸ் அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 155 ஓட்டங்கள் எடுத்தது. திலீப் நாத் 39 ஓட்டங்களும், ரோஹித் 30 ஓட்டங்களும் எடுத்தனர்.
பின்னர் ஆடிய சுதுர் பஸ்ச்சிம் ராயல்ஸ் அணி 13.3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 158 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
ருத்ரதாண்டவமாடிய ஜார்ஜ் முன்சி (George Munsey) 54 பந்துகளில் 12 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 125 ஓட்டங்கள் விளாசினார். பினோத் பண்டாரி 27 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 30 ஓட்டங்கள் எடுத்தார்.
