லண்டனில் பாலஸ்தீன ஆதரவு பேரணி... உள்விவகார செயலாளர் சுயெல்லா பிரேவர்மேன் கடும் தாக்கு
லண்டனில் நினைவேந்தல் நாளில் பாலஸ்தீன ஆதரவு பேரணிக்கு தடை விதிக்க மறுக்கும் காவல்துறையை உள்விவகார செயலாளர் சுயெல்லா பிரேவர்மேன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
கடுமையாக இருக்கிறார்கள்
லண்டன் பொலிசார் பாலஸ்தீன ஆதரவு பேரணிக்கு இணக்கமாக செயல்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ள சுயெல்லா பிரேவர்மேன், அவர்கள் இடதுசாரிகளால் ஆதரிக்கப்படும் அரசியல் ரீதியாக இணைக்கப்பட்ட சிறுபான்மை குழுக்களை விட வலதுசாரி எதிர்ப்பாளர்கள் மீது வேண்டுமென்றே கடுமையாக இருக்கிறார்கள் எனவும் விமர்சித்துள்ளார்.
Credit: Rex
மேலும், துரதிர்ஷ்டவசமாக, மூத்த காவல்துறை அதிகாரிகள் ஆர்ப்பாட்டக்காரர்கள் விடயத்தில் மறைமுக இணக்கத்தை வெளிப்படுத்துகிறார்கள் என்ற கருத்து உள்ளது என்றார்.
கருப்பின மக்களின் போராட்டத்தின் போது லண்டன் பொலிசாரின் உண்மை முகம் வெளிப்பட்டது என்றும் சுயெல்லா பிரேவர்மேன் சாடியுள்ளார். பாலஸ்தீன ஆதரவு குழுக்கள் சட்டத்தை மீறினாலும், லண்டன் காவல்துறை கண்டுகொள்வதில்லை என குறிப்பிட்டுள்ள சுயெல்லா பிரேவர்மேன்,
பிரதமர் அலுவலகம் மறுத்துள்ளது
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் வலதுசாரி மற்றும் தேசியவாத எதிர்ப்பாளர்களுக்கு ஆனால் கடுமையான பதிலடி கொடுக்கப்படுகிறது எனவும் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய மற்றும் முன்னாள் பொலிஸ் அதிகாரிகளிடம் தாம் பேசியதாகவும், இந்த இரட்டை நிலைப்பாட்டை சுட்டிக்காட்டியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Credit: Twitter
ஆனால் சுயெல்லா பிரேவர்மேன் முன்வைத்துள்ள இந்த கடும் விமர்சனங்களுக்கு அவரது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்து தெரிவிக்க மறுத்துள்ளதுடன், பிரதமர் ரிஷி சுனக் இந்த கருத்தை ஆதரிக்கிறாரா என்பதை உறுதி செய்யவும் பிரதமர் அலுவலகம் மறுத்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |