நாய்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ள பிரித்தானிய உள்துறைச் செயலர்: ஒரு சுவாரஸ்ய தகவல்
அனைத்து நாய்களிடமும் தான் மன்னிப்புக் கேட்டுக்கொள்வதாக பிரித்தானிய உள்துறைச் செயலர் தெரிவித்துள்ளார்.
நாய்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ள பிரித்தானிய உள்துறைச் செயலர்
ஊடகவியலாளர்கள் சந்திப்பு ஒன்றில், தான் அனைத்து நாய்களிடமும் மன்னிப்புக் கேட்டுக்கொள்வதாக பிரித்தானிய உள்துறைச் செயலரான சுவெல்லா பிரேவர்மேன் தெரிவித்துள்ளார்.
Not to be all insane moments in British politics, but here's Suella Braverman standing on a dog pic.twitter.com/fuilOOihFO
— Alexander Brown (@AlexofBrown) October 3, 2023
என்ன நடந்தது?
சுவெல்லா, நாய் ஒன்றின் காலை மிதித்துக்கொண்டிருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் பரவலாக பகிரப்பட்டுவருகின்றன.
The dog has just started growling as Suella Braverman has appeared on the news!
— Silvana ? ??? ?? (@ilovemypets56) October 3, 2023
அது, கண் பார்வையற்ற ஒருவரின் வழிகாட்டி நாயாகும். அதன் பெயர் Inca.
Suella Braverman reacting to seeing that picture of herself standing on a guide dog at the common sense group Tory rally after activists chant her name to a huge applause https://t.co/q7eoqIhkZi pic.twitter.com/M8WwhWgwMt
— Aletha Adu (@alethaadu) October 3, 2023
சுவெல்லாவை இணையவாசிகள் பயங்கரமாக கலாய்த்துவரும் நிலையில், தான் அனைத்து நாய்களிடமும் மன்னிப்புக் கேட்டுக்கொள்வதாக தெரிவித்துக்கொண்ட சுவெல்லா, எனது பயணத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோவின்போது, நாய்கள் எதுவும் பாதிப்புக்குள்ளாகவில்லை என்று நினக்கிறேன் என்று வேடிக்கையாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |