இந்தியாவுக்கு உதவ இந்திய வம்சாவளி பிரதமருக்கு முட்டுக்கட்டையாக நிற்கும் இந்திய வம்சாவளி அமைச்சர்
உலகமே இந்த வார இறுதியில் இந்தியாவில் நடைபெற இருக்கும் G 20 உச்சி மாநாட்டை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டுள்ளது. அதற்கு ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு காரணம் உள்ளது.
G 20 மாநாட்டை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் உலகம்
G 20 மாநாட்டை உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது எனலாம். அதற்கு முக்கிய காரணம் உக்ரைன் போர்.
சீன ஜனாதிபதியும், ரஷ்ய ஜனாதிபதியும் உச்சி மாநாட்டுக்கு வரவில்லை என அறிவிக்கப்பட்டுவிட்டது. ஆக, அவர்கள் இருவரும் இல்லாத மாநாட்டில் எப்படி முக்கிய விடயங்கள் விவாதிக்கப்படும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இந்தியாவுக்கு உதவ ஆட்சேபனை தெரிவிக்கும் இந்திய வம்சாவளி அமைச்சர்
சரி, விடயத்துக்கு வருவோம். பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் G 20 உச்சி மாநாட்டுக்காக இந்தியா வருகிறார். அவர், ஆயிரக்கணக்கான மாணவர் விசாக்களும் வணிக விசாக்களும் வழங்குவதற்கான திட்டங்களில் கையெழுத்திட தயாராகிவருகிறார்.
ஆனால், இந்தியாவுக்கு உதவுவதற்கு, இந்திய வம்சாவளி பிரதமருக்கு தடையாக நிற்பதே, இந்திய வம்சாவளி உள்துறைச் செயலரான சுவெல்லா பிரேவர்மேன்தான்.
ரிஷி அதிக புலம்பெயர்வோரை பிரித்தானியாவுக்கு வரவேற்பது தனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தவில்லை என அவர் நாடாளுமன்றத்திலேயே கூறியுள்ளார்.
வெண்ணெய் திரண்டு வரும்போது தாழி உடைந்தது போல என்னும் கதையாக, இந்தியாவுக்கு ரிஷி புறப்படும் நேரத்தில் சுவெல்லா இப்படி முட்டுக்கட்டை போட்டிருக்கிறார்.
நாடாளுமன்றத்தில் சுவெல்லா இது குறித்து பேசியதை ரிஷி கவனமாக கேட்டதாகவும், அவர் கூறியதை ஆமோதிப்பது போல தலையை ஆட்டியதாகவும் நாடாளுமன்றத்தில் இருந்தவர்கள் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |