பிரித்தானிய உள்துறைச் செயலர் சுவெல்லாவின் பெயர் சுவெல்லாவே இல்லையாம்... இதுவரை வெளிவராத ஒரு தகவல்
சர்ச்சையின் மறுபெயரே சுவெல்லா என்று கூறும் அளவுக்கு தொடர்ந்து சர்ச்சைக்குரிய விதத்தில் பேசிவரும் பிரித்தானிய உள்துறைச் செயலர் சுவெல்லா பிரேவர்மேனுக்கு, அரசியலில் எதிர்ப்பு வலுத்து வருகிறது.
வீடற்றவர்கள் குறித்தும், பொலிசார் குறித்தும் அவர் சமீபத்தில் தெரிவித்துள்ள கருத்துக்களால் பிரித்தானிய அரசியல் வட்டாரம் கொந்தளித்துப்போயுள்ளது. அவரை பிரதமர் ரிஷி பதவி நீக்கம் செய்யவேண்டும் என குரல்கள் வலுத்துவருகின்றன.
இதுவரை வெளிவராத தகவல்கள்
இந்நிலையில், சுவெல்லா குறித்து இதுவரை வெளிவராத சில தகவல்கள் வெளியாகியுள்ளன. அவற்றில் மிக சுவாரஸ்யமானது என்னவென்றால், சுவெல்லாவின் உண்மையான பெயர் சுவெல்லாவே அல்ல!
Image: PA
43 வயதாகும் சுவெல்லாவின் உண்மையான பெயர் Sue-Ellen Cassiana Braverman என்பதாகும். சுவெல்லாவின் தாய்க்கு மிகவும் பிடித்த அமெரிக்கத் தொலைக்காட்சித் தொடரான Dallas என்னும் நிகழ்ச்சியில் ஒரு கதாபாத்திரத்தின் பெயர் Sue Ellen Ewing என்பதாகும். அந்த பெயரையே மகளுக்கு வைத்துவிட்டாராம் சுவெல்லாவின் தாய்.
ஆனால், அந்த பெயர் அவரது ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களுக்கு பிடிக்காததால், சூ - எல்லென் என்பதை சுவெல்லா என்று அழைக்கத் துவங்கினார்களாம் அவர்கள். இப்போது வரை அந்த பெயரே நிலைத்துவிட்டதாக தெரிவித்துள்ளார் சுவெல்லா.
Image: Getty Images
சுவெல்லாவின் குடும்பப் பின்னணி
எப்போது பார்த்தாலும் புலம்பெயர்தலுக்கு எதிராகவே பேசிக்கொண்டிருக்கும் சுவெல்லாவும், புலம்பெயர்தல் பின்னணி கொண்டவர்தான்.
அவரது தாயார் பெயர், உமா ஃபெர்னாண்டஸ், அவர் இந்து மதத்தைப் பின்பற்றுபவர். அவர் மொரீஷியஸ் நாட்டிலிருந்து பிரித்தானியாவுக்கு புலம்பெயர்ந்தவர். தந்தை பெயர் கிறிஸ்டி ஃபெர்னாண்டஸ், அவர் கென்யா நாட்டிலிருந்து புலம்பெயர்ந்தவர்.
சுவெல்லாவின் கணவர் பெயர், Rael Braverman. அவர் அவர் ஒரு யூதர். 2018ஆம் ஆண்டு திருமணமான சுவெல்லா, பிரேவர்மேன் தம்பதியருக்கு, இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். தம்பதியரின் மகன் 2019இலும், மகள் 2021இலும் பிறந்தவர்கள்.
சுவெல்லா, புத்த மதத்தைப் பின்பற்றுபவர் ஆவார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |