பொடுகு தொல்லையால் அவஸ்தையா? இதோ அற்புதமான வழிகள்
பொதுவாக நாம் அனைவரும் சந்திக்கும் ஒரு பிரச்சினைகளில் ஒன்று தான் பொடுகு. இது மிகவும் எரிச்சலூட்டும் முடி பிரச்சினைகளில் ஒன்றாக இருக்கிறது. இந்த பல காரணங்கள் சொல்லப்படுகின்றது.
தலை முடி தன் ஈரப்பதத்தை இழக்கும் பொழுது வறண்டு போய் பொடுகு தொல்லை ஆரம்பிக்கிறது.
தலை பொடுகு மேலும் அதை குணப்படுத்துவது என்பது அவ்வளவு எளிதானது விஷயம் அல்ல.
இருப்பினும் சில எளிய பொருட்களை வைத்து கூட இதனை விரட்ட முடியும். தற்போது அவை என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
- உப்பு இரண்டு ஸ்பூன் எடுத்து கொண்டு, சிறிதளவு தண்ணீரில் கலந்து கொள்ளவும். பின்பு அவற்றை தலைமுடியின் வேர்ப்பகுதியில் மென்மையாக 10-15 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். பின்பு மைல்டு ஷாம்பு போட்டு தலை அலச வேண்டும். இவ்வாறு வாரத்தில் இரண்டு முறை செய்து வந்தால் தலையில் இருக்கும் பொடுகு பிரச்சனை விரைவில் குணமாகும்.
- வாரத்தில் ஒரு முறை மருதாணி இலையை அரைத்து சிறிதளவு தயிர் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து தலை தேய்த்து குளித்து வர பொடுகு தொல்லை நீங்கும்.
- நெல்லிக்காய் பொடி, வெந்தய பொடி மற்றும் சிறிதளவு தயிர் சேர்த்து தலை தேய்த்து சிறிது நேரம் வைத்திருந்து பின்பு தலை தேய்த்து குளித்து வர பொடுகு தொல்லை நீங்கும்.
- எலுமிச்சம் பழச்சாறுடன், தயிர் மற்றும் பச்சை பயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து சில நிமிடங்கள் கழித்து ஷாம்பு போட்டு குளித்தாலும் பொடுகு நீங்கும்.
- வினீகர் சமமான அளவில் தண்ணீரையும், வினீகரையும் சேர்த்து ஒரு கலவையை தயாரித்து கலவையை தலைச் சருமத்தில் தடவி, இரவு முழுவதும் அப்படியே விட்டு விடுங்கள். காலை எழுந்தவுடன் மிதமான ஷாம்புவால் தலை முடியை அலசுங்கள்.
- குளிப்பதற்கு 20 நிமிடங்களுக்கு முன் கற்றாழை ஜெல்லை, தலைச் சருமத்தில் தேய்த்துக் கொள்ளுங்கள். 20 நிமிடங்கள் கழித்து ஒரு ஷாம்புவை கொண்டு தலையை அலசிக் கொள்ளவும். இவ்வாறு செய்வதினால் பொடுகு தொல்லை நீங்கும்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.