பிரித்தானியாவில் உச்சத்தை தொடும் உணவு பொருட்கள்: சர்க்கரை விலை உயர்வு காரணமா?
பிரித்தானியாவில் சர்க்கரை விலை அதிகரித்து வருவது உணவு பொருட்களின் விலையை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்கிறது.
அதிகரிக்கும் சர்க்கரை விலை
பிரித்தானியாவில் அதிகரித்து வரும் சர்க்கரை விலை உணவுப் பொருட்களின் விலையை சாதனை உச்சத்திற்கு கொண்டு செல்கிறது என புதிய புள்ளிவிவரங்கள் வெளிப்படுத்துகின்றன.
சர்க்கரை விலை உயர்வு மற்றும் அதிக உற்பத்தி செலவுகள் ஆகியவற்றுடன் இனிப்புகள், சாக்லேட், மற்றும் குளிர் பானங்களின் விலை உயர்வுக்கு வழிவகுக்கின்றன.
மேலும் ஐரோப்பா மற்றும் வட ஆப்பிரிக்காவில் விளைச்சல் குறைந்துள்ளதால், பழங்கள் மற்றும் காய்கறிகளின் விலையும் அதிகரித்துள்ளது.
sky news
இதற்கிடையில் உயரும் விலைகளின் மோசமான நிலையை பிரித்தானியா இன்னும் காணவில்லை என்று எச்சரிக்கைகளும் வெளிவந்துள்ளன.
அந்த வகையில் பிரிட்டிஷ் ரீடெய்ல் கன்சோர்டியம் (BRC)தலைமை நிர்வாகி ஹெலன் டிக்கின்சன் வழங்கிய தகவலில், பிரித்தானிய கடைகளின் விலை பணவீக்கம் இன்னும் உச்சத்தை தொடவில்லை என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன் பிரித்தானியாவில் வரவிருக்கும் மாதங்களில் உணவு விலை உயர்வுகள் எளிதாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
yahoo.com
அதிகரிக்கும் பணவீக்கம்
கடந்த மாதம் 14.5%மாக இருந்த ஒட்டுமொத்த உணவுப் பணவீக்கம் தற்போது 15%மாக அதிகரித்துள்ளது.
அதே சமயம் உணவின் விலை கடந்த மார்ச் மாதத்தை விட 17% அதிகமாக இருப்பதாகவும், இது பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச விகிதமாகும்.
BRC-NielsenIQ குறியீட்டின்படி, கடை விலைகள் ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததை விட தற்போது 8.9% அதிகமாக உள்ளது.
getty