கோயில் ஸ்டைலில் மணமணக்கும் சர்க்கரை பொங்கல்! இப்படி செய்தாலே போதும்
கோயில் ஸ்டைலில் சர்க்கரை பொங்கல் எப்படி செய்வது என்பதை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
கோயில் சர்க்கரை பொங்கல்
கோயிலில் வழங்கப்படும் சர்க்கரை பொங்கல் என்றாலே தனிச்சுவை தான். குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் வழங்கப்படும் சர்க்கரை பொங்கலுக்கு தனி பிரியர்களே இருக்கின்றனர்.
அதுவும், கோயில்களில் உள்ள பிரசாத ஸ்டாலில் வழங்கப்படும் சர்க்கரை பொங்கலும் சுவையாக இருக்கும். அதை எப்படி அதே ஸ்டைலில் செய்வது என்பதை பார்க்கலாம்.
தேவையான பொருள்கள்
பச்சரிசி - 1 கப் (250 மி.லி கப்)
தண்ணீர் - 2 1/2 லிட்டர்
பாசி பருப்பு - 1/2 கப்
நெய் - 1/2 கப்
கொப்பரை தேங்காய் - 1 கப்
ஏலக்காய் தூள் - 1 டீஸ்பூன்
கிராம்பு - 4
முந்திரி பருப்பு
காய்ந்த திராட்சை
நெய் - 4 டேபிள்ஸ்பூன்
பொடித்த வெல்லம் - 500 கிராம்
செய்முறை
தேவையான பொருள்கள் அனைத்தையும் எடுத்துக் கொள்ள வேண்டும். முதலில் பாத்திரத்தில் பச்சரிசியை ஊற வைக்க வேண்டும். பின்பு, ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி பாசி பருப்பை 20 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
பின்னர், பச்சரிசியை அதில் சேர்த்து வேக வைத்து நெய் சேர்த்து கலந்து இறக்க வேண்டும். இதன்பின், கடாயில் நெய் ஊற்றி முந்திரி, திராட்சை, கொப்பரை தேங்காய், ஏலக்காய் தூள், கிராம்பு ஆகியவற்றை கலந்து தனியாக எடுத்து வைக்க வேண்டும்.
அடுத்து ஒரு பாத்திரத்தில் தண்ணீர் மற்றும் வெல்லம் சேர்த்து கலந்து விட வேண்டும். வெல்லம் கரைந்த பின்பு, தனியாக எடுத்து வைத்திருந்த முந்திரி, திராட்சை கலவையை சேர்த்து கலந்து வைக்க வேண்டும்.
இதன்பின், வேக வைத்த அரிசியில் வெல்லம், முந்திரி, திராட்சை, தேங்காய் கலவையை சேர்த்து வேக வைக்க வேண்டும். கடைசியாக நெய் கலந்து பரிமாறினால் கோயில் ஸ்டைல் சர்க்கரை பொங்கல் தயாராகிவிடும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |