கோழிக்கறி வர்த்தகத்தில் ரூ.12000 கோடி வருமானம்! இந்தியாவே உற்றுநோக்கும் தமிழன்
சுகுணா புட்ஸ் கோழிக்கறி விற்பனை மூலம் இந்தியாவிலேயே மிகப்பெரிய தொழிலதிபராக மாறியிருக்கிறார் என்றால் ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா?
ஆம் கோவையை சேர்ந்த சுகுணா புட்ஸ் நிறுவனத்தின் ஆண்டு வருவாய் மட்டும் ரூ.12000 கோடிகள்.
வெறும் 5000 ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் அபார வளர்ச்சி கண்டுள்ளது.
18 மாநிலங்களில் 15000 கிராமங்களில் கோழிப்பண்ணை வைத்துள்ளனர் விவசாயிகள்.
1984ம் ஆண்டுகளில் இரு சகோதரர்கள் சௌந்தரராஜன் மற்றும் சுந்தரராஜன் என்பவர்களால் தொடங்கப்பட்டதே சுகுணா சிக்கன்.
கோயம்புத்தூரிலிருந்து 72 கி.மீ தொலைவில் உடுமலைப்பேட்டையில் 5000 ரூபாய் முதலீட்டை கொண்டு தொழிலை தொடங்கியுள்ளனர்.
பள்ளிப்படிப்பு முடிந்ததும் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளார் சௌந்தரராஜன், ஆனால் அதில் எதிர்பார்த்த வருமானம் இல்லாததால் ஹைதராபாத்துக்கு வேலைக்கு சென்றுள்ளார்.
அங்கு சரிவர இல்லாமல் போக, சகோதரருடன் சேர்ந்து ஏதாவது தொழில் செய்ய என்ற நோக்கத்தில் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார்.
இருவரும் சேர்ந்து கோழிகள் வளர்க்கும் விவசாயிகளுக்கு தீவனங்களை விற்கும் தொழிலை பார்த்துள்ளனர், விவசாயிகளிடம் பேசிய போது தான், கோழிகள் வளர்ப்பத்தில் உள்ள சிரமங்கள் குறித்து தெரியவந்தது.
இதில் ஒரு திட்டம் உதிக்க, மூன்று விவசாயிகளை தங்களுடன் இணைத்துக் கொண்டு கோழிகளை வளர்க்க முடிவு செய்துள்ளனர்.
அவர்களுக்கு தேவையான உதவிகள் அனைத்தையும் செய்து கொடுத்தனர், விவசாயிகள் கோழிகளை நன்றாக வளர்த்து கொடுக்க வேண்டும், இது இப்படியே சென்று கொண்டிருக்க 7 ஆண்டுகளில் 40 விவசாயிகளுடன் விரிவாக்கம் அடைந்தது.
சுகுணா சிக்கன் என்ற பெயரும் தமிழக மக்கள் மத்தியில் பிரபல்யமானது. மிக ஆரோக்கியமான முறையில் கோழிகளை விவசாயிகள் வளர்த்து கொடுக்க வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக இருந்துள்ளனர், அப்போது தான் மக்களிடம் தரமான பொருளை விற்பனை செய்ய முடியும்.
படிப்படியாக முன்னேற்றம் அடைந்து இன்று இந்திய அளவில் தங்களது தொழிலை விரிவுபடுத்தியுள்ளனர்.
80 சதவிகிதம் பேர் விவசாயிகளே, அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்து சுயதொழில் செய்ய ஊக்குவிக்கின்றனர், தற்போது மட்டும் 18 மாநிலங்களில் 15000 கிராமங்களில் விரிவடைந்துள்ளது.
சுமார் 40000 விவசாயிகள் வேலை செய்கின்றனர், படிப்பும் தேவையில்லை, முதலீடும் தேவையில்லை, உங்களுக்கான ஆர்வம் இருந்தால் நீங்களும் தொழிலதிபர் ஆகலாம் என அழைப்பும் விடுத்துள்ளனர் சுகுணா புட்ஸ் நிறுவனர்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |