சரத்பாபுவின் மரணத்திற்கு காரணம் என்ன? சுஹாசினி பேட்டி
பிரபல தென்னிந்திய நடிகர் சரத்பாபு உடல்நலக்குறைவால் காலமானதைத் தொடர்ந்து திரைநட்சத்திரங்கள், ரசிகர்கள் தொடர்ந்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் சரத்பாபு
1973 ஆம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் சரத்பாபு, தொடர்ந்து கே.பாலச்சந்தர் இயக்கத்தில் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தார்.
தன்னுடைய அசாத்திய நடிப்பால் மக்களின் மனதை கட்டிப்போட்ட சரத்பாபு, கமல்,ரஜினி, சிவாஜி மற்றும் சிரஞ்சீவி ஆகியோருடன் இணைந்து நடித்துள்ளார்.
தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம் என தென்னந்திய திரையுலகில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
கடந்த சில வாரங்களாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சரத்பாபு, சிகிச்சை பலனின்றி காலமானார்.
மேலும் இவரது மறைவையொட்டி நேரில் வந்து அஞ்சலி செலுத்திய நடிகை சுஹாசினி பேசுகையில், நடிகர் சரத் பாபுவிற்கு எந்தவொரு கெட்ட பழக்கமும் கிடையாது. அவர் சத்தான உணவை மட்டுமே சாப்பிட்டு வந்தார்.
தினமும் தவறாமல் உடற்பயிற்சி செய்வார். இவ்வாறு இருக்கையில் திடீரென்று உடல் நலக்குறைவால் அவருடைய காலில் வீக்கம் வந்தது. மேலும் உடல் எடை குறைவடைந்து. அதன் காரணமாகவே வைத்தியசாலையை நாடினார்.
இவ்வாறு அவர் தனது உடலை கவனித்து வந்தாலும் எப்படி இவ்வாறு ஒரு நோய் வந்தது என்று தெரியவில்லை. இது ஒரு கவலைக்குரிய விடயாமாகவே இருக்கின்றது என தெரிவித்துள்ளார்.