பல ஆண்டுகளாக தற்கொலை எண்ணத்துடன் போராடிவருகிறேன்: பிரித்தானியாவிலிருந்து நாடுகடத்தப்பட இருந்த இலங்கைத் தமிழர்
தவறாக குற்றம் சாட்டப்பட்டு நாடுகடத்தப்பட இருந்த இலங்கைத் தமிழர் ஒருவர், பல ஆண்டுகளாக தான் தற்கொலை எண்ணத்துடன் போராடிவருவதாகத் தெரிவித்துள்ளார்.
ஒரு வயது குழந்தை ஒன்றை அவர் கொன்றுவிட்டதாக அவர் மீது தவறாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இலங்கைத் தமிழரான மயூரன் தங்கரத்னம் (Mayooran Thangaratnam, 41), 2003ஆம் ஆண்டு பிரித்தானியாவுக்கு தப்பியோடினார்.
ஆனால், 2004ஆம் ஆண்டு, மயூரன் ஒரு வயது குழந்தை ஒன்றை கொலை செய்துவிட்டதாகவும், அவருக்கு 16 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதாகவும் பிரித்தானிய உள்துறை அலுவலகம் தவறான ஒரு தகவலை பதிவு செய்துள்ளது.
Photograph: Antonio Olmos/The Guardian
மூன்று முறை அவரை நாடுகடத்தவும் முயன்றுள்ளது உள்துறை அலுவலகம்.
பிரித்தானியாவுக்கு வந்து பட்டப்படிப்பு படித்து ஒரு அக்கவுண்டண்டாக புதுவாழ்வைத் துவக்கவேண்டும் என்ற கனவில் தான் இருந்ததாகக் கூறும் மயூரன், ஆனால், அந்த வாய்ப்புகளை தான் இழந்துவிட்டதாகவும், பாதி வாழ்க்கை அடுத்து என்ன ஆகுமோ என்ற முடிவு தெரியாத நிலைமையிலேயே வீணாகிவிட்டதாகவும் தெரிவிக்கிறார்.
தான் ஒரு குழந்தையைக் கொன்றவன் என உள்துறை அலுவலக ஆவணம் சொல்வதை அறிந்தபோது, கடும் அதிர்ச்சியடைந்த தனக்கு தற்கொலை எண்ணங்கள் ஏற்பட்டதாக தெரிவிக்கிறார் அவர்.
2019 மற்றும் 2021இல் மயூரன் புதிய சட்டத்தரணிகளை தனக்கு நியமிக்க, அவர்கள் வெற்றிகரமாக மயூரனுக்கு அகதி நிலை பெற்றுத்தந்துள்ளார்கள்
தற்போது, தொடர்ந்து தான் பிரித்தானியாவிலேயே தங்குவதற்காக உள்துறை அலுவலகத்தில் விண்ணப்பம் ஒன்றை அளித்திருக்கிறார் மயூரன்.